தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Naladiyar

"பழகு தமிழ்ச், சொல்லாருமை நாலிரண்டில்," ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்பன பழமொழிகள். சங்க நூல்களின் உரையாசிரியர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் முதலியோரால் இந்நூல் மேற்கோளாக எடுத்தாளப்படும் பெருமையினையுடையது.

சிற்சில அதிகாரங்களில் அவ்வதிகாரங்கட்குப் பொருத்தமிலாப் பாக்கள் கலந்திருத்தலானும், கூறிய கருத்தே பின்னுங் கூறியது கூறலாக வருதலானும், இன்னும் இவைபோன்ற பல்லேதுக்களானும் இந்நூல் ஒருவரான் இயற்றப்படாது பல்லோராற் பாடப்பட்டுப் பின்னொருகால் மற்றோரால் தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்று கொள்ளக்கிடக்கின்றது. மேலும், தமிழ் கூறு நல்லுலகத்து ஆங்காங்கே வழக்கும் நீதிகளை முதலாகக்கொண்டு பாடப்பட்டதெனக் கொள்ளக் கிடக்கின்றதன்றி, இஃதொரு மொழிபெயர்ப்பு நூல் என்று கொள்வதற்கு யாதொரு சான்று மின்றென்க.

இந்நூலில் பெருமுத்தரையர் வள்ளன்மை பற்றிய குறிப்புக்கள் வந்துள்ளமையின் பெருமுத்தரையர் காலத்திலேனும், அதற்குச் சற்றுப் பின்னரேனும் இந்நூலின் பாக்கள் பாடப்பட்டிருத்தல் வேண்டும். பெருமுடத்தரையர் என்பார் பாண்டியர்க் கடங்கிருந்த சிற்றரசராவர் ; பாண்டியரையே அப்பெயர் குறிக்குமென்று கூறுவாருமுளர்.

இந்நூலைப் தொகுத்து ஓருரையும் இயற்றினார் பதுமனார் என்பர். அவ்வுரை கிடைத்திலது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:45:41(இந்திய நேரம்)