தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cirupanchamoolam-அடுத்தப்பக்கம்


நூன்முகம்

தமிழ்மொழி பல்லாயிரம் யாண்டுகளாகத் தோற்றமுற் றிலங்கும் உயர்தனிச் செம்மொழி. இதனைச் சங்கம் நிறுவிப் போற்றி வளர்த்த பெருமை பாண்டியர்க்கே யுரியது. பாண்டியர் நிறீஇய முச்சங்கங்களிற் கடைச்சங்க மிருந்து தமிழாராய்ந்தார், சிறு மேதாவியார், மருதனிளநாகனார், பெருங்குன்றூர்க்கிழார், நக்கீரனார் முதலானவர். அவர்கள் பாடியன கூத்தும், வரியும், பேரிசையும், சிற்றிசையும், பத்துப் பாட்டும், எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க்கணக்கும் என்றித் தொடக்கத்தன. இவற்றுள், பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மேற்கணக்கைச் சார்ந்தவை.

‘’அடிநிமிர் பில்லாச் செய்யுட்டொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்’’

என்ற பன்னிருபாட்டியற் சூத்திரமேற்கோளுக்கிணங்கக் குறைந்த அடிகளையுடைய செய்யுட்களான் அறம் பொருள் இன்பம் இவற்றைத் தழுவி அமைந்த நூல் கீழ்க்கணக்காகும். கணக்கு-நூல். கீழ்க்கணக்கு சிறுபான்மை ஐம்பதிற் குறைந்தும் ஐந்நூற்றின் மிக்கும் வரும். இனியது, இன்னா, கார், களவழி நான்கும் ஐம்பதிற் குறைந்து வந்தன. முப்பாலாகிய திருக்குறள் ஐந்நூற்றின் மிக்கு வந்தது. இக் கீழ்க்கணக்கு நூல்களையே ”தாய பனுவல்,’’ என்னும் பெயராற் கூறுவர் எனவும், இவை அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றிற்கும் இலக்கணஞ் சொல்லுவ எனவும், இடையிடை அவையன்றியுந் தாஅய்ச்செல்வது முண்டெனவும். இச் செய்யுட்கள் அடி நிமிராது இரண்டடி முதல் ஆறடி யிறுதியாக வருவன வெனவும், அவை பல எழுத்தினான் அகன்று காட்டாது சில எழுத்தினான் வருவன எனவும்,


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:55:44(இந்திய நேரம்)