தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Iynthinai Ezhubathu


என்னும் துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளார் (தொல். பொருள். 111). ஆயினும், நூற்பெயரை அவரும் சுட்டினாரல்லர். இங்ஙனமாகவே, இச் செய்யுள் இந் நூலின் பகுதியென்று உறுதியாகக் கொள்ளுவதற்கு இல்லை. எனினும், முற்பதிப்பில் இருத்தல் பற்றிநூல் இறுதியில் இப் பாடலும் தனியாக இணைக்கப் பெற்றிருக்கிறது.

இந்நூல் செம்பாகமான தெள்ளியநடையை மேற்கொண்டுள்ளது.

சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும் (5)

பெருத் தகு தாளாண்மைக்கு ஏற்க,
அரும் பொருள் ஆகும் (29)

என்றாற் போன்ற சிறந்தகருத்துகள் சில அங்கங்கே உள்ளன. அக்காலப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், முதலியனவும் இந் நூலால் புலனாகின்றன.

இந் நூற் செய்யுட்கள் பலவற்றை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலியோர் தத்தம் உரைகளில் எடுத்தாண்டுள்ளனர். பழைய உரையும் கிளவிக் குறிப்புகளும் முதல் 24 பாடல்களுக்கே கிடைத்துள்ளன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:01:06(இந்திய நேரம்)