தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yelathi-அடுத்தப்பக்கம்


முன்னுரை

‘ஏலாதி' என்னும் இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவை என்பது இதற்கு முன் யாங்கள் வெளியிட்ட சிறுபஞ்சமூல முகவுரையான் அறியப்படும்.இந்நூல் கடைச் சங்க மருவிய நூல்களுள் ஒன்றாகலான், இதனாசிரியரது காலம் அச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட தன்றென்பது போதரும். இதில் தற்சிறப்புப்பாயிரச் செய்யுள் ஒன்றும், சிறப்புப்பாயிரச் செய்யுள் ஒன்றும் உள்பட எண்பத்திரண்டு செய்யுட்களிருக்கின்றன. இந்நூலினிறுதியில் "தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் - கணிமேதையார் செய்த ஏலாதி முற்றிற்று," என்றிருத்தலின். இதனாசிரியர் மாக்காயனார் என்பவருடைய மாணாக்கர் என்பதில் ஐயமில்லை. அது நிற்க, சிறுபஞ்ச மூலத்தின் இறுதியிலுள்ள "மல்லிவர்தோண் மாக்காயன் மாணாக்கன் ..................... மாக்காரியாசான், சிறுபஞ்ச மூலஞ் செய்தான்" என்னுஞ் சிறப்புப்பாயிரச் செய்யுளால் அந்நூலின் ஆசிரியராகிய காரியாசான் என்பவரும் இம் மாக்காயனார் மாணாக்கரே என்பது பெறப்படுகின்றது. எனவே ஏலாதி யாசிரியரும், சிறுபஞ்சமூல வாசிரியரும் ஒருசாலை மாணக்கராவர்.

"மல்லிவர்தோண் மாக்காயன்" என்றமையால் அம்மாக்காயனார் போர்த்தலைவராயும், இவ்விரு நூலா


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 17:17:32(இந்திய நேரம்)