Primary tabs
இது திணைமொழி ஐம்பதை ஒத்துள்ளது. அறுபது பாடல்களையுடைய இந்நூலும் திணைமொழி ஐம்பது முதலிய அகப் பொருள்நூல்களின் காலத்தை அடுத்துத் தோன்றியதாதல் கூடும்.
இந் நூல்
செய்யுட்களை இளம்பூரணர் முதலிய பழைய உரைகாரர் எடுத்தாண்டுள்ளனர். நூல்முழுமைக்கும் பழைய உரை கிடைக்கவில்லை. 18 முதல் 26வரையிலும்,35 முதல் 43 வரையிலும், 53 முதல் 60 வரையிலும் உள்ள பாடல்களுக்கு உரி உரைப் பகுதியே கிடைத்துள்ளது. இப் பகுதியிலுங்கூட ஒரு சில பாடல்களின் உரைப்பகுதி அங்கங்கே சிதைவுற்றுள்ளது. உரையுள்ள பாடல்களில் பெரும்பாலனவற்றிற்குக் கிளவிக் குறிப்புகளும்
கிடைத்துள்ளன.