தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kainilai



இது பதினெட்டு நூல்களையும் காட்டுமாறு ஒரு புலவராற் பாடப்பட்டது எனத் தெரிகிறது. பாட வேறுபாடு பல. வேண்டிய வேறுபாடு ஒன்றை மட்டும் காட்டுகின்றேன். "இன்னிலைய காஞ்சியுடனேலாதி யென்பதூஉம், கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு" என்பது இவ்வேறு பாட்டில் ஒன்று. முன்னது "இன்னிலை" ஒரு நூலாகக் காட்டுகின்றது. பின்னது "கைந்நிலை" ஒரு நூலாகக் காட்டுகின்றது. இன்னிலையை நூலாகக் கொண்டால் கைந்நிலை மறைந்து "ஒழுக்க நிலையனவாம்" கீழ்க்கணக்கு என அடை மொழியாகின்றது. கைந்நிலையை நூலாகக் கொண்டால் இன்னிலை மறைந்து "இனிய நிலைமையாகிய காஞ்சி என அடை மொழியாகின்றது. பதினெட்டாவது நூல் இன்னிலையா? கைந்நிலையா? என்ற ஐயம் எவர்க்கும் தோன்றுகின்றது. "இன்னிலை" உள்ளது என்று பலர் கூறினர். கைந்நிலை உள்ளது ஒன்று பலர் கூறினர். ஏட்டிலுள்ளது என முன்னர்க் கூறியவர்கட்கு எடுத்துக் காட்டுபவர் போல "இன்னிலை" என்ற நூலை திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதித்தனர். "கைந்நிலை" எனற் நூலை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் பதித்தனர். அவற்றின் வரலாறு சிறிது காண்க.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:16:54(இந்திய நேரம்)