தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manimegalai-Book Content


ஆராய்ச்சி முன்னுரை

       "கதிரோன் தோன்றுங் காலை ஆங்கவன்
       அவிரொளி காட்டும் மணியே போன்று
       மைத்திருள் கூர்ந்த மனமாசு தீரப்
       புத்த ஞாயிறு தோன்றும்." (12: 83 - 6)

எனவும்,

       "கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
       வலையிடைப் பட்ட மானே போன்றாங்கு
       அஞ்சிநின் றழைக்கும் ஆ" (13: 31 - 33)

எனவும்,

       "குளனணி தாமரைக் கொழுமல நாப்பண்
       ஒருதனி ஓங்கிழ திருமலர் போன்று
       வான் தரு கற்பின் மரையுறை மகளிரில்
       தான் தனி ஓங்கிய தகைமையள்." (15: 75 - 8)

எனவும்,

       "அறத்தின் ஈட்டிய ஓண்பொருள் அறவோன்
       திறத்துவழிப் படூஉஞ் செய்கை போல
       வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத்
       தான்தொலை வில்லாத் தகைமை." (17: 3 - 6)

எனவும்,

       "வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்துக்
       கருவி மாமழை தோன்றிய தென்னப்
       பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு
       அமுத சுரபியோ டாயிழை தோன்றி" (17: 91 - 4)

எனவும்,

       "வேக வெந்தீ நாகங் கிடந்த
       போகுயர் புற்றளை புகுவான் போல
       ஆகந் தோய்ந்த சாத்தலர் உறுத்த
       ஊழடி இட்டதன் உள்ளகம் புகதலும" (20: 98 - 101)

எனவும்,

       "தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து
       மாறுகொண் டோரா மனத்தினள்." (23: 142 - 3)

எனவும், சிறந்த உவமங்கள் பொருந்தியுள்ளமை ஒரு சில எடுத்துக் காட்டப் பெற்றன; இன்னும் இந் நூற்கண் இவை பரந்துபட்டுக் கிடப்பதை ஆங்காங்குக் கற்பார் கண்டு இறும்பூ தெய்தலாம்.

மாந்தர்கள்

இப்பெருங் காப்பியத்தில் வரூஉம் ஆண்மக்களும் பெண்மக்களும் பலராவர். அவர்களுள் மணிமேகலையின் சார்பாகமட்டும் காணின், ஆடவருள் மாவண் கிள்ளி, உதயகுமரன், ஆபுத்திரன், அறவணவடிகள், காஞ்சனன் என்பவர்களும், மகளிருள், மாதவி, சுதமதி, ஆதிரை, தித்திராபதி முதலியோர்களும் ஆவர்.

1. மாவண் கிள்ளி; உதயகுமரன் தந்தை; இவ்வரசன் பெயர் 'மாவண் கிள்ளி' என்றே கூறப் பெறுகின்றது. இவன் செங்கோன்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 07:49:56(இந்திய நேரம்)