தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதிப்புரை


பதிப்புரை

இயம்பினோம். உயர்திரு. புலவர், "அரசு" அவர்கள் சொற்பொருளும் விளக்கவுரையும் எழுதி உதவினார்கள். பெருமழைப் புலவர் உயர்திரு. பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் ஒவ்வோர் இலம்பகத்திற்கு முதலிற் கதைச் சுருக்கம் தெளிவாக வரைந்துதவினர். அன்றியும் பல பாடல்கட்குக் குறிப்புரையும் கொடுத்து உதவினார்கள். அவ்விருவர் உரைகளையும் ஆய்ந்து நன்முறையில் தொகுத்து இந்நாள் வெளியிடுகின்றோம்.

சீவக சிந்தாமணியிலுள்ள பாடல்கள் மூவாயிரத்திற்கு மேற்பட்டன. அவற்றுடன் சொற்பொருளும் விளக்கவுரையும் கூடும்போது பெரும் புத்தகமாகும். எடுத்துப் படிப்பார்க்குப் பெரும் பாரமாய்க் கைகளை வருத்தும். பலகையில் வைத்துப் படிப்பார்க்கே தகுதியுடையது. இரு கையில் வைத்துப் படிப்பார்க்கு ஏற்றதன்று என ஆய்ந்து எல்லாரும் எடுத்துப் படிக்கத்தக்க முறையில் இரு பகுதியாகப் பிரித்து அச்சிட எண்ணி, அம்முறையில் முதற் பாகம் இப்போது வெளி வந்துள்ளது. இரண்டாம் பாகமும் இனி வெளிவரும்.

இப் புத்தகத்திற் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பதிகம் ஆகிய மூன்றும், நாமகளிலம்பகம் முதல் கேமசரியாரிலம்பகம் வரை யுள்ள ஆறு இலம்பகங்களும் அடங்கியுள்ளன. பாடல்கள் மொத்தம் 1555 ஆகும். பாடல்கள் எல்லாம் புணர்ச்சி விதிப்படி வரைந்து சீர்மட்டும் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. பாக்களில் உள்ள சொற்களைத் தனித்தனி பிரித்துக் காட்டி ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விளங்க நல்லுரை வரைந்திருப்பதனால் பாட்டிற் சொற்பிரிப்பது பயனற்றதென விடுத்தோம்.

செய்யுளைப் பிரித்தாற் சீரும் தளையும் எதுகையும் மோனையும் சந்தமும் புணர்ச்சியிலக்கணமும் கெடும் என்பதைப் புலவர்கள் உய்த்துணரவேண்டும். செய்யுள் புணர்ச்சியிலக்கணப் படி பொருந்த நிற்பதுதான் சிறந்தது என்பது எமது கருத்து.

சொற்பொருளும் விளக்கமும் வரைந்த உயர்திரு. புலவர் "அரசு" அவர்கள் நச்சினார்க்கினியர் உரையைத் தழுவியே வரைந்திருக்கின்றனர். நச்சினார்க்கினியர் மாட்டேற்றாகப் பொருத்தமின்றி உரைவரைந்த இடங்களை எடுத்துக்காட்டி நூலாசிரியர் கருத்தோடு முரண்படு மாற்றையும் நுணுகி


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-01-2019 16:41:27(இந்திய நேரம்)