தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அணிந்துரை


அணிந்துரை

காட்சியே காணும்படி நூல் செய்திருத்தலின் இந்நூலை, 'மணநூல்' என்றும் வழங்குவது முண்டு.

இனி இன்னோரன்ன நூல்களைக் காப்பியம் என்று வழங்கும் வழக்குத் தமிழ்வழக்கன்று. இவ்வழக்கு வடமொழியாளருடைய வழக்கேயாகும். பண்டைத் தமிழிலக்கண நூலோர் இன்னோரன்ன நூல்களை வனப்பு நூல்கள் என்றே வழங்கினர். ஒரு நூல் ஒரு செய்யுளாலேயே முடிவதும் உண்டு. திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாட்டுக்களும், தனித்தனியே ஒவ்வொரு செய்யுளாலேயே இயன்ற தனி நூல்களேயாகும். இனி நம் சங்க விலக்கியங்களிலே எஞ்சிய எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க்கணக்கும் பலப்பல செய்யுள்களாற் றொடர்புபட்ட வனப்பு நூல்களே என்றுணர்தல் வேண்டும். இந்த வனப்பியல் நூல்கள் எட்டுவகை வனப்புகளுள் தத்தமக்கு ஏற்கும் வனப்புகளை ஏற்பனவாம். அவ்வனப்புகள்,

"அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு"

என வரும் இவ்வெட்டுமே யாம்.

இவற்றுள் நமது சிந்தாமணி தொன்மை என்னும் வனப்புப் பற்றி எழுந்த நூலாகும். தொன்மை என்பது பழையதொரு கதையைப் பொருளாகக் கொண்டு இயற்றப்படும் தொடர்நிலைச் செய்யுள் நூல் என்பர். பழைய கதை பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட இவ்வகை வனப்பு நூல்கள் தொல்காப்பியத்திற்கு முன்னர்த் தமிழகத்திலே இருந்தன என்பது இந்த இலக்கணமிருத்தலாலே ஊகிக்கப்படுகின்றது. ஆனால் இந்தத் தொன்மை என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாக இற்றைநாள் நமக்குக் கிடைத்துள்ள இச் சிந்தாமணி முதலிய வனப்புக்கள் எல்லாம் அவ்விலக்கணந் தோன்றியபின்னர்த் தோன்றிய நூல்களேயாம்.

இனி, இந்த எண்வகை வனப்புக்களில் சீவக சிந்தாமணி தொன்மை என்னும் வனப்பை அடிப்படையாகக்கொண்டு வேறு சில வனப்புக்களையும் உறுப்பாகக் கொண்டு திகழ்கின்றது. அவையாவன : அம்மை, அழகு, தோல் என்னும் இம்மூன்றுமாம். என்னை ? இந்நூல், சின்மென் மொழியாலே ஐந்தடியின் ஏறாது அமைதிப்பட்டு நிற்கும் செய்யுட்களை உறுப்பாகக் கொண்டு அற முதலியவற்றிற்கும் இடையிடையே இலக்கணங் காட்டித் தாவிநடத்தலாலே 'அம்மை' என்னும் வனப்பையும் , செய்யுண் மொழியாலே இரண்டு முதலிய சொற்களை இணைத்துக் கற்போர் உளத்தே என்றென்றும் நின்று நிலவும் மாண்புடைய இனிய சொற்றொடர்களை யாண்டும் தன்னகத்தே தாங்கி


புதுப்பிக்கபட்ட நாள் : 24-01-2019 17:12:56(இந்திய நேரம்)