Primary tabs
முன்னுரை
புல்லை மேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் தீங்குழல் இசைப்பவும் பந்தர் முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின் அக் காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று'' எனவரும்.
(தொல். 81. சூ. 6. 3. உரை.)
இங்ஙனம் ஆசிரியர் நச்சினார்க்கினியர் தந்த அருமந்த நுண்ணிய விளக்கத்தை ஓதிய உணர்ச்சியோடே இப் பெருங் கதையில் வருகின்ற முல்லைத்திணைச் செய்யுட் பகுதியை இனிக் காண்பாம்.
''பொருள்வயிற் பிரிவோர் வரவெதி
ரேற்கும்
கற்புடை மாதரிற் கதுமென
உரறி
முற்றுநீர் வையக முழுது
முவப்பக்
கருவி
மாமழை பருவமொ
டெதிரப்
பரவைப் பௌவம் பருகுபு
நிமிர்ந்து
கொண்மூ விதானந் தண்ணிதிற்
கோலித்
திருவில்
தாமம் உருவுபட
நாற்றி
விடுசுடர் மின்னொளி விளக்க
மாட்டி
ஆலி வெண்மணல் அணிபெறத்
தூஉய்க்
கோல வனப்பிற் கோடணை
போக்கி
அதிர்குரன்
முரசின் அதிர்த
லானாது
தூநிறத் தண்டுளி தானின்று
சொரிந்து
வேனில் தாங்கி மேனி
வாடிய
மண்ணக
மடந்தையை மண்ணுநீ
ராட்டி
முல்லைக் கிழத்தி முன்னருள்
எதிரப்
பல்லோர் விரும்பப் பரந்துகண்
அகன்று
பொருள்வயிற் பிரிந்து பொலங்கல
வெறுக்கையொடு
இருள்வயின்
வந்த இன்னுயிர்க்
காதலன்
மார்பகம் மணந்த நேரிழை
மடந்தையர்
மருங்குல் போலப் பெருங்கவின்
எய்திய
சிறுகொடி ஊழூழ் பரப்பி
மற்றவர்
முறுவல் அரும்பிய முல்லை
அயல
குரவுந் தளவுங் குருந்துங்
கோடலும்
அரவுகொண் டரும்ப அறுகால்
வண்டினம்
அவிழ்பதம் பார்த்து மகிழ்வன
முரலக்
கார்வளம்
பழுனிக் கவினிய கானத்(து)''
(1. 69 ; 76-101)
நிகழும் நிகழ்ச்சியினைப் பிற்காண்போம்.