Primary tabs
நூலாசிரியர் வரலாறு
''சான்றோர் செய்யுட்களினும் கூத்தியர் இருக்கையும் சுற்றியதாகக் காப்பிய வாசனை கலந்தவை சொல்லி என, இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச் சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்து அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும் வெள்ளூர்க்காப்பியனாரும், சிறுபாண்டரங்கனாரும், மதுரையாசிரியன் மாறனாரும், துவரைக் கோமகனும், கீரந்தையாரும் என்றித் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து எழு நூற்றுவர் தம்மால் பாடப்பட்ட கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியம் ஆராய்ந்து செய்த உதயணன் கதையுள்ளும்'' என அடியார்க்கு நல்லார் உரைத்தலானும் உணரலாம்.
இனி இந்நூலாசிரியர் கடைச்சங்ககாலத்தை ஒட்டிய காலத்தே மணிமேகலை ஆசிரியர் சிலப்பதிகார ஆசிரியர்களாகிய சீத்தலைச் சாத்தனார்க்கும் இளங்கோவடிகளார்க்கும் முன்னர் உயிர் வாழ்ந்தவர் என்று கருத இடனுளது. என்னை? மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் தங் காப்பியத்தில்,
''கொடிக்கோ சம்பிக் கோமக
னாகிய
வடித்-தேர்த் தானை வத்தவன்
தன்னை
வஞ்சஞ் செய்துழி வான்றளை
விடீஇய
உஞ்சையிற் றோன்றிய யூகி
யந்தணன்
உருவுக் கொவ்வா உறுநோய்
கண்டு
பரிவுறு மாக்களின்''
(மணிமே. 15.41-4.)