தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதிப்புரை


இக்காலத்துக்கு வேண்டும் அறிவும் ஆற்றலும் உள்ளத்தில் அமைவதற்கு இப்பெருங்கதை யொன்றே போதும். இந்நூலின் கண்ணுள்ள இரண்டாவது இலாவாண காண்டம் வித்துவான் வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அம் மாணவர்கள் எளிதாகக் கற்றுப் பயன் பெறும் பொருட்டு இதன்பால் அமைந்த நகர் கண்டது. முதல் சண்பையுள் ஒடுங்கியது சறாகிய இருபது காதைகளுக்கும் அடியொற்றிப் பொருள் காணுமாறு தெளிந்த பொழிப்புரையும், விரிந்த விளக்கமும், இன்றியமையா இலக்கணக் குறிப்பும், தக்கமேற்கோள்களும் அமைத்து வெளியீட்டுள்ளோம். இதன் உரையாசிரியர் குறுந்தொகை, பத்துப்பாட்டு முதலிய ஒப்புயர்வு
இல்லாச் செப்பரும் தமிழ் நூல்களுக்கு உரை இயற்றிய பெருமழைப் புலவர், திரு. பொ. வே. சோமசுந்தரனாராவர். இதன் மற்றைய காண்டங்களின் உரைகளும் கழக வழியாக விரைவில் வெளிவரும்.

    இக்காதையின்கண் அமைச்சர் சூழ்ச்சித் திறனும், அரசனைக் கடமை வழுவாது ஆளச் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் அரும்பெரும் செயலும், அதற்குத் துணையாக ஒத்துழையாக்கும் ஏனையோர் திறனும், சிறப்பாகத் தவமது மகளாம் சாங்கியத் தாயும் பட்டத்தரசியாம் 
வாசவதத்தையும் ஒத்துழைத்தமை தமிழகத்தார் கொண்டிருந்த உயிரினும் சிறந்த கடமையின் தனிச்சிறப்பைக் காட்டுவனவாகும். மேலும் தன்னுயிர் காக்கும் காதலினும் அனைத்துயிரையும் காக்கும் காக்கும் காவலே முதற் பெருங் கடமை என்பதையும் வலியுறுத்தும், காவல் எனினும் ஒன்றே, இவற்றை எல்லாம் நுணுகி ஆய்ந்து திறம்பட முடிக்கும் முதலமைச்சன் யூகியின் ஆற்றல் வியக்கத்தக்கது. இவ்வரலாறு இக்காலத்துக்கு வேணடிய அறிவும் ஆற்றலும் பயக்கும் நெறியினாதாக அமைந்துள்ளது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-01-2019 11:34:06(இந்திய நேரம்)