தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kamba Ramayanam - Bala Kaandam


அறநிலையத் தலைவரின் இரண்டாம் பதிப்பு

முன்னுரை

கம்ப ராமாயணத்துக்குச் சிறப்பான முறையில் உரைஎழுதியிருக்கிறார்கள், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் முதலியவர்கள். ஆனால், ஏறத்தாழ ஒரு தலைமுறைக்காலமாக எந்த உரையும் கிடைப்பதில்லை. தற்காலத்துக்குஏற்ற கருத்தோட்டத்துடன் ஒரு புதிய உரை வெளியிடுவதுநல்ல பணி என்று நண்பர்களும் அறிஞர்களும் தெரிவித்தனர்.அந்தக் கருத்தை ஏற்றுக் கோவை கம்பன் டிரஸ்ட் சார்பில் கம்பராமாயண விளக்க உரை வெளியிடுவதென முடிவுசெய்யப்பட்டது. அந்த முடிவின் விளைவே இந்த விளக்க உரை.

இந்த உரைத்திட்டம் உருப்பெறுவதற்குக் கடை காலிட்ட அமரர். செந்தமிழ்    அருட்செம்மல்   பி.எஸ்.ஜி.ஜி. கோவிந்தசாமிஅவர்களையும் நினைவில் கொள்கின்றோம்.  

கம்பராமாயண விளக்க உரை நிர்வாகக் குழுவிலும் நிதிக்குழுவிலும் பங்கு ஏற்று, இவ்வுரை வெளிவரக் கம்பன் டிரஸ்டுக்கு உறுதுணை புரிந்த நண்பர்களுக்கு நன்றி.

பொதுவாக, அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒருமையுணர்வுடன் செயல்படுவது கடினம். கருத்து வேறுபாடுகளால் அவர்கள் கூட்டுச்சேர்வதில்லை. இந்தப் பொது விதிக்கு மாறாக அறிஞர்பலரின் கூட்டு முயற்சியால் இந்த உரை உருவாகி வெளிவருகிறது.அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தங்கள்கருத்துரிமைக்கு இடம் இருப்பதால், இப்பணியில் இணைந்தனர் என்று கருதலாம். அத்துணை உரையாசிரியர்களுக்கும்நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் பதிப்பின் போது உரையாசிரியர் குழுவின் நெறியாளராகவும் முதன்மைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் அமரர் அ.ச. ஞானசம்பந்தன்  இந்தக் கம்பன் திருப்பணி நிறைவேறப் பெரிதும் பாடுபட்டார். அவர்களது பணியையும் உள்ளத்தில் கொள்கிறோம்.

முதல் பதிப்பின் குழுக்களின் அமைப்பாளராகிய திரு. இ. வேங்கடேசலுவும்   ஒருங்கிணைப்பாளரும், இணைப்பதிப்பாசிரியருமாகிய     டாக்டர்    ம.ரா.போ. குருசாமியும்தளர்ச்சிக்கு இடம் கொடாமல் பாடுபட்டனர். அவர்களுக்குநன்றி.

இது இறைவனின் பணி, கம்பன் டிரஸ்ட்டை இப்பணியில் ஈடுபடுத்திய பரம்பொருளின் கருணை என்றும் துணையிருக்கவேண்டும் என்று நன்றியோடு பிரார்த்திக்கிறேன்.

பல அன்பர்களின் வேண்டுகோளையும் தமிழ் கூறும்நல்லுலகத்திலிருந்து வந்துள்ள தேவைகளையும் கருத்தில் கொண்டுஇரண்டாம் பதிப்பாகிய இது மலிவு விலையில் வெளிவருகின்றது. 

குறுகிய காலத்தில் அழகுற அச்சிட்ட சென்னை நாதன்கம்பெனியாருக்கும் நன்றி.

இலக்கிய உலகம் பெற்றுப் பயன் கொள்வதாகுக. 

1.2.2004
சுபானு, தை.

ஜி.கே. சுந்தரம்
தலைவர்
கம்பன் டிரஸ்ட், கோவை


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2017 17:02:37(இந்திய நேரம்)