Primary tabs
iii
பெயர்ப்பான பாடல்களும், புதிதாகக் காண்பவர்க்கு
மொழிபெயர்ப்பு என்று
தோன்றாதவாறு இயற்கையாகவே அமைந்தன போலத் தோன்றுகின்றன.
இங்ஙன் பாடிய வில்லிபுத்தூரார்திறம் மிகவும் பாராட்டற்குரியது.
ஆயினும், வில்லிபுத்தூராரின்
பாரதம்முழுவதும் பாலபாரதத்தின்
மொழிபெயர்ப்பாகவே அமைந்ததென்று சொல்ல இயலாது. இந்த
ஆதிபருவத்தைப் பாலபாரதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்ததும் இறுதிப்
பருவங்கட்கும் பாலபாரதத்துக்கும் ஒற்றுமை வேற்றுமை யெவ்வாறு உள்ளன
என்றுகவனித்து நோக்கினேன். வில்லிபாரதத்திற் காணப்படும் இறுதிப்
பருவங்களாகிய சல்லிய சௌப்திகபருவங்களிற் கூறிய கதைப்பகுதியைக் கூறுவது,
பால பாரதத்திலே 78- சுலோகங்களைக் கொண்ட பதினெட்டாஞ் சருக்கமாகும்.
அந்தச்சருக்கத்தில், கூறியுள்ளனவான - சல்லியன் சேனாதிபதியானது, சல்லியன்
சகதேவனால் மாண்டது, துரியோதனனை வீமன் கொன்றது, க்ருஷ்ணனுடைய
தூண்டுதலால் பாண்டவர்கள் வேற்றிடத்திலிருக்க அசுவத்தாமன் த்ருஷ்டத்யும்நன்
முதலானோரைக் கொன்றது என்றாற் போன்ற சில விஷயங்கள் தவிர,
மற்றை வர்ணனைகள் கதைப்போக்குக்கள் யாவும் பாலபாரதத்தோடு சிறிதும்
ஒற்றுமைப்படாது வில்லிபாரதத்தில் வேறுபட்டே யுள்ளன. மற்றும் ஆங்காங்குத்
தள்ளிப் பார்த்தபோதும் வேறுபட்டுள்ளதாகவே காண்கின்றது. இன்னும்
முற்றவும் ஒத்திட்டுப்பார்க்க வசதி நேர்படவில்லை.
இங்ஙனிருப்பதுகொண்டு
நான் ஊகிப்பது - மிகவும் பெருகி யிருந்த
பாரதகதையைச் சுருக்கிக்கூற விரும்பிய வில்லிபுத்தூரார் பாலபாரதமென்ற
வடமொழிக்காப்பியம் முதற்கதைப்பகுதியை இனிது சுருக்கிக்கூறியிருப்பது
கண்டு அதனையொட்டி நூலைத் தொடங்கினார்: பின்னர்த் தம்விருப்பின்படியே
இந்நூலைப் பாடினாரென்பது.
இனி, பாலபாரதந்தான்
வில்லிபுத்தூரார் பாரதத்தை யொட்டிச் சில
விடத்து எழுதப்பட்டதென்று கூறலாகாதோ என்று கற்போர்க்கு ஓரெண்ணம்
உண்டாகலாம்: அந்த எண்ணத்தை மாற்றுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
முதலாவது - பாலபாரதத்துக்கூறிய
வருணனையை வில்லிபுத்தூரார்
பின்னும் சிறப்புறக் கூறுவது: அங்ஙன் கூறுவதற்கு உதாரணம் வருமாறு:-
பொழுது விடிதலை வருணிக்குமிடத்துப் பாலபாரதத்தில்” உந்மிஷத்யுஷஸி தஸ்ய
ரக்ஷஸோ - ரக்தமுஷ்ணமிவ பாது முத்ஸு கா ஸ்வாப மாகலித மாநிசாத்யயம் -
வாஸவ்ருக்ஷமத தத்யஜு : ககா: [இரவுபுலரும்வரைத் தாம் கொண்ட துயிலை
விடியல்நேரம் வந்தபோது விட்டிட்டு அந்த ராக்ஷஸனுடைய வெம்மையுள்ள
இரத்தத்தைப் பருகுவதற்கு ஆசை யுற்றனபோற் பறவைகள் தம்வாழிடமான
மரத்தைவிட்டன],” “தாவதுத்திதகரஸ் தமோமயம் - ராக்ஷஸம் விசகலய்ய
பாநுமாந் பீமஸேநஇவ பார்த்தாமநஸாநீ - அம்புஜாநி தத்ருசே விகாஸயந்
[அப்போது எழுந்தகரங்களை