Primary tabs
V
பாடிய மற்றைப்பகுதிகட்கும் பாலபாரதத்திற்கும் ஆதிபருவத்திற் போல ஒற்றுமை காண்கின்றிலது: ஆகவே, வில்லிபாரதத்துக்கு வியாசபாரதமே முதனூலென்னத் தட்டில்லை. ஆயினும் சிலஇடங்களில் வியாசபாரதத்தோடும் மாறுபடுகின்றது. அவ்விஷயம் நூலினுட்புறத்து உரையிலும் ஆங்காங்குக் காட்டப்பட்டுள்ளது: இங்குஞ் சில காட்டப்படுகின்றன. (அங்ஙனம் மாறுபடுமிடத்து எந்த நூலை ஆதாரமாகக் கொண்டு அமைத்தனரோ, விளங்கவில்லை.)
வியாசபாரதத்திற் பிரதானமான பருவங்கள் பதினெட்டு: ஒவ்வொருபருவத்திலும் உபபருவங்கள் பல உள்ளன: அங்ஙனமே ஆரணியபருவத்திலும் பல உபபருவங்கள் உள்ளன. ஆரணியபரு வம்பருவத்திலுள்ள அஜகரபர்வம் கோஷயாத்ராபர்வம் த்ரௌபதீஹரண பர்வம் ஜயத்ரத விமோசநபர்வம் என்ற உபபர்வங்களிலுள்ளசரிதைகள், அருச்சுனன்றவநிலை நிவாதகவசர்காலகேயர்வதை என்பன போல முக்கியமானவை: இவற்றிற் கூறப்படுகிற சரிதைகள் முறையே காட்டப்படுகின்றன.
அஜகரபர்வத்திற் கூறப்படுகின்ற சரிதை:- நிவாதகவசர் முதலியோரைக்கொன்று துறக்கத்தினின்று அருச்சுனன் மீண்டுவந்ததும், பாண்டவர் கந்தமாதனமலையினின்று இறங்குமாறு கருதுகையில், லோமசமுனிவர் சுவர்க்கத்திற்குச் சென்றனர். பின்பு அந்தப் பாண்டவர் கந்தமாதனமலையினின்று இறங்கி முறைமையாகக் கைலாசம் முதலிய இடங்கட்குச் சென்று த்வைதவனத்தையடைந்தனர்: அப்பால் வீமசேனன் வனத்தில் வேட்டையாடச் செல்ல, அங்கு அவனை ஒருமாசுணம் பற்றியது: அப்போது தோன்றிய துர்நிமித்தத்தால் தருமன் வருத்தமுற்று வீமனை நாடி வந்து அன்னான் மாசுணத்தாற் பற்றப்பட்டிருத்தலைக் கண்டான். கண்டதும் அந்த மாசுணத்துக்கும் தருமனுக்கும் நிகழ்ந்த சம்பாஷணையில், தருமன்பேச்சைக் கேட்டு மனமுவந்த மாசுணவடிவாயிருந்த நகுஷன் வீமசேனனை விட்டிட்டுச் சுவர்க்கஞ்சென்றா னென்பது.
கோஷயாத்ராபர்வத்திற் கூறப்படுகின்ற சரிதை:- த்வைத வனத்தினின்று காம்யகவனத்திற்குப் பாண்டவர் மீண்டுஞ் சென்றனராக, ஸ்ரீக்ருஷ்ணன் ஸத்யபாமையுடன் காம்யகவனத்தையடைந்து அந்தப் பாண்டவரோடு அளவளாவிச்சென்றான். பிறகு, திருதராட்டிரன், ஓரந்தணன் வாயினாற் பாண்டவரின்செயலையறிந்து வருந்திப் பாண்டவரால் தன்மக்கட்கு நேரவிருக்கும் வதைக்கு வருந்தினான்.இவ்வாறு நிகழ, கர்ணசகுனியர் வனத்தில் வசிக்கும் பாண்டவர்க்குத் தம்முடைய விபவத்தைக்காட்டி வருத்தமுண்டாக்க வேண்டுமென்று துரியோதனனைத் தூண்டினர்."பிறகு த்வைதவனத்திற் செல்வதற்குக் *கோஷயாத்ரையை வியாஜமாகக் கொள்ளுமாறு அவர்கள் அறுதியிட்டனர். பின்பு த்வைதவனத்திலுள்ள
*கோஷயாத்ரை
- இடைச்சேரியைக் காணச்செல்லும் செலவு.