தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 52 -

 
‘வந்து தும்பிவண் டாதி நாலவைந்
 
திந்தி யம்பசுநரர் நரகர் தேவராம்.‘

எனவும் (மேரு.822, 823-ல்) கூறியதனா லறிக.  இனி, எண்ணிறந்தனங்கமெல்லாம் என்னும் பாடத்திற்கு - அளவிறந்த ஆகாசமெல்லாம் என்று பொருள் கொள்க.           (32)

(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும்

உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)

நரககதி வரலாறு

37. 
முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ
 
றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம்
 
அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள்
 
உழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ.

(இ-ள்.) உழை விழி-பெண்மான்போலும் பார்வையினையுடைய தங்கையே, அழலினுள் மூழ்கி அன்ன-(உயிருடன்) அனலில் விழுந்தாற்போன்ற, அரு நவை நரகந்தம்முள்-பொறுத்தற்கரிய துன்பந்தரும் நரகங்களுள், முழம் ஒருமூன்றில் தொட்டு-(முதல்நரகத்திலுள்ளார் உடம்பின் அளவான) மூன்றுமுழம் தொடங்கி, எழு முறை பெருகி-ஏழுநரகத்தும் முறையாகப் பெருகி, மேன்மேல் எய்திய-ஒன்றை ஒன்று இரட்டித்த அளவாகச் சென்று (ஏழாம் நரகத்து) அடைந்த, ஐந்நூறு மூரிவெஞ்சிலைகள் - ஐந்நூறு வில்லின் உயரம் வரையிலும் ஆகிய,  உருவம் எல்லாம் - நரகயாக்கையாவும், நம்மோடு ஒன்றி ஒருவின-நம் உயிருடன் பொருந்தியிருந்து நீங்கியன; (அப்பிறவிகளை), உணரல் ஆமோ-இத்துணைய வென்று உணரமுடியுமோ?(முடியாது). (எ-று.)

மூன்று முழவுயரத்திலிருந்து ஐந்நூறு வில்வரையிலுமுள்ள நரகர்யாக்கையில், நாம் பிறந்து நீங்கினது அளவில்லாத னவென்றானென்க.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:52:46(இந்திய நேரம்)