Primary tabs
யென்றும், வினையாலன்றி தங்கள் முயற்சியினாலேயே பயன் அடைகின்றார்க ளென்றும், அஞ்ஞானத்தால் மயங்கிக் கூறினவர்களை; அம்மயக்கத்தி னின்றும் நீக்கி, நல்வழியி லொழுகச் செய்யு மென்றா னென்க.
ஊழ்வினை என்ப தொன்றில்லை யென கருதுபவர், ‘பிறந்தவர் முயற்சியாலே பெறு பய னடைவர்‘ என்றும்,மண் முதலிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலேயே இவ்வுடலும் அறிவும் தோன்றினவே யன்றி உயிரும் அதற்குத்தக்க பிறவியும் வினையும் இல்லை என கருதுபவர், ‘இறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானும் இல்லை‘ என்றும் கூறுவர். அவர், ‘ ஊழிற் பெறுவலி யாவுள மற்றொன்று, சூழினுந் தான் முந்துறும்‘ என்று தேவர் குறளிலும். (67)
என்று (110) நாலடியாரிலும் மற்றும் பலநீதி யுரைகளிலும் கூறுகின்றவைகளை நம்பாது பேசுகின்றவராதலின்; அன்னார் கூற்றை, ‘அறிவில்லாமை‘ என்றார்.
இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த
வரலாறு கூறல்
(இ-ள்.) அறப்பொருள் விளைக்கும் - தருமத்தை உண்டாக்கும், காட்சி அருந்தவர் - நற் காட்சியும்அரிய தவமும்
1 மதன் கண்