தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 151 -

தோழி, பாகனைக் கண்டு  மீளல்.

102.
மழுகிரு  ளிரவின் வைகி மாளவ பஞ்ச  மத்தேன்
 
ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே
 
கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள்
 
தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்

(இ-ள்.)  இருள் மழுகு இரவின் - இருளினால்  ஒளி மழுங்கிக் கிடக்கிற இராக்காலத்தில்,  வைகி - தங்கியிருந்து,  மாளவ பசஞ்மத் தேன் மாளவபஞ்சமம் என்னும் பண்ணாகிய தேன், ஒழுகிய -ஒழுகுவதற்குக் காரண மாயிருந்த, மிடற்று -கண்டத்தையுடைய,  ஒர்காளை உள்ளவன் - ஒப்பற்ற காளைபோன்று இருப்பவன்,  யாவன் என்று -எவன்? என்று, நாடி - தேடி, கழுது உரு அவனை- பேயினது வடிவம் போன்ற அட்டபங்கனை,  கண்டனள் - (குணவதி) பார்த்தாள்; கண்டு - பார்த்தவுடன்,  தையற்கு- அமிர்தமதிக்கு,  காமத்து ஒழுகிய உள்ளம் - கள்ளக் காமத்தின்பாற் சென்ற மனம், ஒழியும் - நீங்கும், என்று, உவந்து மீண்டாள் - மகிழ்ந்து திரும்பினாள்;(எ-று.)

தோழி, பண் ஒழுகிய காளை எவனென நாடி, பேய் போன்ற அட்டபங்கனைக் கண்டு,   இவனுருவத்தின் இயல்- பைக் கூறின் அப்பொழுதே அரசியின் காதல் மாறிவிடும் என்று மகிழ்ந்து மீண்டாள் என்க.

ஓர்,  அசையெனினுமாம்.  ‘கழுதுருவவனைக்‘  கண்டதும்,  தன் தலைவியின் தீய செயலும் அதற்குத்தான் உடனின்று கூட்டுவித்தலும் ஒழியு மென்ற எண்ணத்தால், உவந்தா ளென்க.  மழுகுஇருள் - மங்கிய இருள் என்னலாம்.  ‘இரா‘ என்னுஞ் சொல், இரவு என்றாயிற்று.     (30)

(மூன்று கவிகளால்)  தோழி, பாகனின் வடிவு கூறல்

103.
மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்
 
தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான்  (டேன்
 
றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்
 
என்னைநீ  முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்..



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:08:56(இந்திய நேரம்)