தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium




- 261 -

(இ-ள்.) நிலைஇலா உடம்பின் வாழ்க்கை - நிலையில்லாத உடலோடுகூடி வாழும் வாழ்க்கையை, நெடிது உடன் நிறுவ என்று - நீண்டநாள் நிலைத்திருக்கச் செய்ய எண்ணி, இக்கொலையினால் - இக்கொலைத்தொழிலேயே, முயன்று - (வேண்டிய) முயற்சியைச் செய்து, வாழும் - --, கொற்றவர் ஏனும் - அரசராயினும், சில பகல் அன்றி - சில நாட்கள் வாழ்ந்தனரேயன்றி, முற்றநின்றார் - முடிய நீடித்து வாழ்ந்தவர், சிலர் இவண் இல்லை - சிலர் தாமும் இவ்விடத்து இல்லை, கண்டாய் - (இதனை நீயும்) அறிந்திருக்கிறாய், (அந்தக் கொலைத்தொழிலால் வந்த தீவினையினால்)  அலைதரும் பிறவி முந்நீர் - துன்பந்தரும் பிறவிக் கடலில், அனந்தம் காலம் - நெடுங்காலம், அழுந்துவர் - மூழ்கி (முக்தியென்னும் கரை காணாது) வருந்துவர். (எ-று..)

வாழ்க்கை நிலையாமையும்,  கொலையால் வருந் துன்பமும் எடுத்தோதினாரென்க.

மக்களுள் மேன்மையுடைய அரசனேயாயினும் நெடுங்காலம் வாழ்ந்திருக்கவில்லை யென்றார். சில பகல் - சின்னாள்; இரண்டொருநாள். ‘இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே‘ என்றார், சிந்தாமணியாரும்.  சிலரும் என்பதில் உம்மைவிகாரம்.  பிறவி முந்நீர், உருவகம்: பிறவியை கடல் என்றமையின் உயிர்களை, 'அழுந்துவர்' என்றார்.   (23)

243. 
இன்னுமீ தைய கேட்க இசோமதி1 தந்தை யாய
 
மன்னவ னன்னை யோடு மாவினற்2 கோழி தன்னைக்
 
கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்
 
பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ. (பம்

(இ-ள்.) ஐய - ஐயனே, இன்னும் ஈது கேட்க - இன்னும் இது ஒன்றை இதற்குச் சான்றாகக் கேட்பாயாக, இசோமதி தந்தையாய மன்னவன் - (இப்போது அரசனாயிருக்கும்) யசோமதியின் தகப்பனாய (யசோதர) அரசன், அன்னையோடு - தாயாகிய சந்திரமதியுடன், மாவின் நல்கோழி

1 யசோமதி.

2 மாவினிற்.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:26:55(இந்திய நேரம்)