தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 325 -

முடிமுதலாகவுள்ள ஆபரணங்கள் இயற்கையாய் அமைவன.  தோள்வளை - தோளி லணியும் வளை (சீவக. 1093.) அடிக்குறிப்புப் பார்க்க.  ‘முடியுங் குண்டலமுந்தோடு மாரமுங் குழையும் பூணுங், கடகமுங் கழலும் பட்டு்ங் கலாபமும் வீழுநூலும், உடனியல்பாகித் தோன்றி  யொளியுமிழ்ந் திலங்குமேனி, படரொளி பரப்ப மஞ்சிற்  பருதியினிருந்த போழ்தின்’  என்னும் (மேரு. 483) செய்யுள்  ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.  ‘வானத்து வில்லைப் போலும்  வடிவெலாஞ் சமைந்து’ (மேரு. 482) என்றும், ‘வானிடு  வில்லின் வரவறியா வாய்மை’ (நாலடி) என்றும் கூறிய செய்யுட்கள் ஈண்டு அறியத்தகும்.  (98)                      

318. 
வந்துவானவர்திசைதொறும்வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி
 
மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும்
 
அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம்
 
வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந
 
[தார்.  

 (இ-ள்.) (அத்தேவர்கள் தோன்றியவுடன்), மருங்கு எங்கும் - எப்பக்கங்களிலும், மலர் மாரி - புஷ்ப மழையும், மந்த மாருதம் - இளந்தென்றலும், துந்துபி வளர் இசை - தேவ துந்துபியின் மிக்க ஓசையும், மலிந்தன - நிறைந்தன: வானவர் - (அதனையறிந்த)  சாமானிக தேவர்கள்,  திசைதொறும் வந்து - எல்லாத் திசைகளினின்றும்   வந்து, வணங்கினர் வாழ்த்தினர் - வணங்கித் துதித்தனர்,  அந்தில் - அவ்விடத்தில், விரும்பிய அரம்பையர் - --, ஆடினர்  பாடினர் - ஆடிப் பாடினர்: அருகு எல்லாம் - அவர்கள்  சமீபங்களில், தேவியர் வந்து - --, மன்மத வாளியின் - காம பாணத்தினால், மகிழ்ந்து - காதலுற்று, உடன் - ஒரு சேர, புடைசூழ்ந்தார் - அவ்விருவர்  பக்கமும் சூழ்ந்தார்கள் (எ-று

நூதனமாகப் பிறந்த அவ்விரு தேவர்களையும்,  சாமானிக தேவருடன் தேவியர்பலர் வந்து சூழ்ந்தன ரென்க.

மகர்த்திக தேவர்களாதலின், வானவர், வந்து வணங்கினர் என்க. தேவர்களின் பிறப்பை யுணர்த்த, கற்பக விருக்ஷம் மலர்மழை சொரிவதும்,




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:37:22(இந்திய நேரம்)