தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



ரெட்டியார் அவர்களையும், கம்ப ராமாயணம், பாரதம், திருக்குறள் முதலிய பெருநூல்களுக்குச் சிறந்த வுரையெழுதியுள்ள திருவல்லிக்கேணி ஸ்ரீமத். உ. வே. வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியார் அவர்களையும் வேண்டிக்கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோட் கிணங்கித்தங்கள் வேலைகளுக்கிடையே இவ்வுரையின் கையெழுத்துப்பிரதியைப் பார்த்துத் தம் கருத்துக்களைத் தெரிவித்ததேயன்றி, அச்சுத்தாள்களையும் ஒருமுறை நோக்கித் தந்தார்கள்.  அவர்கள் இருவருக்கும் அடியேன் எழுமையும் நன்றி பாராட்டுங் கடப்பா டுடையேன்.

இப்புத்தகத்தை அச்சிடத் தொடங்கியபோது, ஜைனசமயப் பெருநூல்களாகிய தத்வார்த்த சூத்ரம், த்ரவ்யஸங்க்ரஹம் இவற்றைச் சிறந்த உரையுடன் வெளியிட்டவரும், ஜைன சித்தாந்தத்தைச் சிறுநூல்களாக எழுதிய வரும் ஆகிய தச்சூர் ஸ்ரீமத். ஸ்ரீபாலவர்ணீயவர்கள் (இப்போது மைசூர் ராஜ்யத்தில் உள்ள பஸ்திமடத்தில் ஸ்ரீமத்,ஸ்ரீபட்டாசார்யவர்ய  ஸ்வாமிகளா யெழுந்தருளியிருப்பவர்) உரையை ஒருமுறை நோக்கி 1 முதல் 176 பக்கங்கள்வரை தங்கள் “மஹாவீர்” ப்ரெஸ்ஸில் அச்சிட்டுதவினார்கள்.  பிற்பகுதி 177 முதல் 332  பக்கங்களும், டைடில் க முதல் கஅ,I to iv பக்கங்களும், சென்னை சாது அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டன.  வர்ணீஜி அவர்கட்கும் சாது அச்சுக்கூடச்செயலாளருக்கும் இந்நூற்றிறத்தில் எனக்கு உதவிபுரிந்தவித்வான் கம்பீர நயினார் அவர்கட்கும் ப்ரதிகள் தந்துதவிய அன்பர் முதலியவர்கட்கும் யான் கடப்பா டுடையேன்.

இக்காப்பியத்தை அச்சிடுவதற்குப் பொருளுதவிபுரிந்த புண்ணியசீலர்களின் பேருதவி போற்றத்தகுவது. அவர்கள் பெயர் முதலியன வருமாறு.--

சாஸ்திரதானத்தின் பொருட்டு முன்பணம் தந்து உதவியவர்கள்

என் சிறியதாயார் வீடுர் மடபதி, சமுத்திரவிஜயநயினார் பாரியை மாதுஸ்ரீ ம. சுலோசனை அம்மாள்
300 0
என் இளைய மாமனார், கும்பகோணம் ஸ்ரீமான் வசுபாலய்யா குமாரர் வ. அனந்தராஜன்
50 0


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:39:25(இந்திய நேரம்)