Primary tabs
51. ‘அறுவகை நயங்களையும் அவற்றின் மேலும் வேண்டப்படும் சப்தபங்கி நயங்களையும்...என்பன,’77.
52. `காதி கன்மங்களின் வீழ்ச்சிக்கண்ணே விரிந்த எண்குணத்த ராகி’ ‘கேவலஞானிகள் என்றற்குச் சித்தரை ஓங்கிய உலகத் தும்பர் ஒளிசிகா மணியின் நின்றார், என்றார்’ இவ்வண்ணம் உச்சிக்கண் நின்றொளிருமிடத்துத் தேவர் பலரும் வந்து அடிவணங்கிப் பரவுப வாதலின், அப் பராவலால் உள்ளத்தே பெருமிதம், செருக்கு முதலிய தீக்குணம் சிறிதும் அணுகாமையின் தீ்ங்கெலாம் அகற்றி என்றார். அகற்றி எனப் பிறவினையால் கூறியது தாம் நீங்கினாராயினும், நீங்காது தீதுற்று வருந்தும் பிறவுயுர்பால் அருள் கொண்டு நீக்குதல் பற்றி என அறிக’ 79-82.
53. ‘இன்நான்கும் நிறைந்த வழி எய்தக் கடவதாய் இருப்பது கேவல ஞானமாதலின், அதனையே கடையிலா நான்மையொடு கூடிய திருவென்றார் என்று அறிக. திரு-திருமகள். திருமொழி-பஞ்ச நமஸ்காரமென்னும் மந்திர மொழி,’ 83-86
54, ‘ஐவகை ஒழுக்கம்-ஐந்து வகையான விரதமெனப்படும். அணுவிரத மைந்தனையும் ஈண்டு ஐவகை ஒழுக்கமென்னு மருங்கலம் என்றார் என உணர்க; அவை: கொலை,பொய், களவு, பிறர் மனை விழைவு, பிறர் பொருள் வௌவல் என்பனவாம்.’ ‘முற்கூறிய ஐவகை ஒழுக்கத்தை மீட்டுங் கூறியது அவற்றின் இன்றியமையாமையை வற்புறுத்துவதற்கு.’ 87-90
55. ‘தீமைப்பங்கம்-துன்பமாகிய சேறு நிறைந்த, ஏழ்பங்கம் ஆடி, ஏழ் நரகத்தினும் வீழ்ந்து மூழ்கிக் கரையேறி,’ 91
56. ‘சேதியின் எறியின்-ஒருவர் தம்மை அரிந்தாலும் போழ்ந்தாலும்.’97.
233. சினமும் செற்றமு முதலாகிய ஏனைத் தொடர்வுகளான அகாதிகன்மங்கள் கெட்டாலன்றி,
நிருமலநித்யம் கைகூடாமை பற்றி சினம் செறுவாதியின்றி என்றும்,
சினம் முதலியன, கேவலஞானந் தலைப்பட்டோராலும், அனந்தசதுட்டயங்களை யெய்திய பின்னன்றி
முற்றவுங் கெடுக்கப்படாத
வன்மையுடையனவாம்; வெகுளி முதலாயின முற்றவுங் கடியுங் குற்றமல்லவெனப் பரிமேலழகியார்