Primary tabs
iv
சிவமயம்
காஞ்சிப் புராணப் பதிப்புரை
கா-பிரமன். அஞ்சித்தல்-பூசித்தல். புரம்-நகரம். பிரமனால் பூசிக்கப்பட்டதால் காஞ்சிபுரம் என்பதாம். பூமாதேவிக்கு உந்தித் தானமாகவும் பேசப்படும் சிறந்த தலம். கடல் பொங்கி அழிக்கவரும் பிரளய காலத்தும் காஞ்சியில் பிரளயம் வந்து அழிக்கவொட்டாமல் காத்த பிரளயங் காத்த அம்மை என்னும் தேவி ஆலயமும் உள்ளது . ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே மாறிலாதிருந்திடு வளங்கொள் காஞ்சி என்பது கந்தபுராணம். ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சித் திருவே கம்பன் செம்பொற் கோயிலென்றார். திருநாவுக்கரசர் திரேதாயுகத்தில் இராவணன் கயிலைமலையை எடுத்தபோது இறைவன் திருவிரலாலூன்ற அழுந்தி வருந்தி ஏனைய தலங்களின் மூர்த்தியை அழைக்காமல் அம்மையார் தனத்திற்குக் குழைந்த பெருமான்தான் நமக்கு உளங்குழைந்தருள்வானென்று. நம் திருவேகம்பப் பெருமானை அழைத்துத் துன்பம் நீங்கி நலம்பெற்றானென்று தாம் பாடியருளிய திருக்குறுந்தொகையில்
என்றனர் . இதனால் இத்தலம் மிகப் புராதனம் என்பதாகும்.
இனிப் புராணம் என்பது அத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது அனாதி முறைமையான பழமை என்று அவனது சொரூப தடத்தலட்சணங்களையும், வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகளையும் கூறுவதுமாகும்.
திருவாசகத்தில் இறைவன் பெருமையைக் கூறும் முதற் பகுதி சிவபுராணமென்றே கூறுகின்றனர்.
திருஞானசம்பந்தர் திருப்பாசுரத்திலும் திருநாவுக்கரசர் இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையிலும் , சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்திலும் புராண வரலாறுகளைச் சிறப்பித்துக் கூறுகின்றனர். சிவபுராணங் கேட்டால் மன அமைதியும், முன் செய்துள்ள சஞ்சிதகன்மமும் தேயும் என்று சிந்தைமகிழச் சிவபுராணந்தன்னை முந்தை வினைமுழுதும் மோயவுரைப்பன் யான் என்றனர். இனி, புராணமே இறைவனுக்குத் திருவுருவம். புராணம் வேறு இறைவன் வேறல்ல புராணமே இறைவன் , இறை