Primary tabs
Lii
ஒத்துச் சிறப்புள்ளவை என்பதும், அவற்றை அடுத்துப் பயிலப் பட்ட பழமை உடையவை என்பதும் இனிது விளங்கும். இதிகாசம் புராணம் என்பதில் அடங்கும் என்பது பெரியோர் கொள்கை.
புராணங்களின் உயர்வு
சமய உணர்வுள்ள நன்மக்கள் புராணங்களை உயர்வாகக் கருதுகின்றனர். அருணந்தி சிவனார் என்னும் பேராசிரியர் ’’சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் சென்றால் சைவத் திறத்தடைவர்’’ எனப் புராணங்களை உண்மை ஞானம் கைவருதற்கு வாயிலாகக் கூறுகின்றார். சமயக் கண்கொண்டு காண்போர் புராணங்களை வேதப்பொருளை விளக்க வந்தனவாகக் கருதுகின்றனர். “புராணமாவது பரமசிவன் உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் முதலியவற்றைக் கூறும் வேதவாக்கியங்களின் பொருள்களை வலியுறுத்தி விரித்து அறிவிப்பது; அஃது உலகத்தினது தோற்றம், ஒடுக்கம், பாரம்பரியம், மனுவந்தரம், பாரம்பரியக் கதைகள் என்னும் இவ்வைந்தையும் கூறும்: இக்காரணம்பற்றிப் புராணம் பஞ்சலக்கணம் எனவும் பெயர் பெறும்’’ என்பது சமயநூல் உணர்ந்தோர் கூறும் கூற்று.
இங்கு மகாபாரதம் ஆதிபருவத்தில் வரும் ஒரு தொடர் அறியத்தக்கது:- “அற்பக் கேள்வியினையுடைய சிறியோன் தனக்குத் தீங்கு விளைப்பான் என வேதம் அஞ்சுகிறது! (ஆதலால்) இதிகாசபுராணம் கொண்டு வேதத்தை நன்கு உபப்பிருங்கணம் செய்க;” என்பது அத்தொடர், இதனால் வேதவாக்கியங்களை இலக்கிய இலக்கண தருக்க ஞானம் மட்டும் கொண்டு ஆராயப் புகுதல் செய்யத்தக்கதன்று; மற்று; இதிகாசம் புராணம் என்பவற்றில் வரும் விளக்கங்களை மனத்திற்கொண்டு மரபு உணர்ந்து (சம்பிரதாயம் தெரிந்து) பொருள் செய்ய வேண்டும் என்பது விளங்கும்.
இக்கருத்தையே கந்தபுராணத்துப் பாயிரப் படலத்துவரும் பின்வரும் பாட்டும் உணர்த்துகின்றது.
உன்னிய நிலையினா உள்ளந் தேறவும்
அன்னவர் அல்லவர் மரபிற் றேரவும்
இன்னும்ஓர் மறையுள(து) இதுவும் கேண்மதி
......................................................
[என்பெயர் அதற்கெனின் இனிது தேர்ந்துளோர்
துன்பம தகற்றிடு தொல்பு ராணமாம்]
புராணம் தரும் பயன்
ஒரு நாட்டில் முற்றக் கற்றுணரும் தலையாய அறிவினர் சிலராகத் தான் இருக்கக்கூடும். ஆயினும், அவர்தம் அனுபவங்களை அந்நாட்டில் உள்ள பிறரெல்லாரும் பெறுதல் வேண்டும். பெற்றால்தான் நாட்டில் உணர்ச்சி இணைப்பு (Emotional integration), ஒருமைப்பாடு, முன்னேற்றம் என்பவை இருக்கும். இது பண்டும் இன்றும் என்றும் உள்ள நடைமுறை