Primary tabs
பதிப்புரை
காவியம் என்றவுடனே 
 கம்பராமாயணந்தான் அனைவர் நினைவுக்கும் வரும் 
 வகையில் நிலைமை வளர்ந்தோங்கியுள்ள தமிழகத்தில், காவியம் என்றவுடனே 
 அது 
 இராவண காவியம் என்று கூறும் நிலைக்கு மாற்றங் கண்டிருக்கின்றோம்.
இதுவே பெரும் வெற்றிதான்,
இராவண காவியம், தமிழகக் காண்டம்; இலங்கைக் 
 காண்டம்; விந்தக் காண்டம்; 
 பழிபுரி காண்டம்; போர்க் காண்டம் என்னும் அய்ந்து காண்டங்களைக் 
 கொண்டு 
 திகழ்கின்றது.
தமிழகக் காண்டம் எட்டுப் படலங்களையும்; 
 இலங்கைக் காண்டம் எட்டுப் 
 படலங்களையும்; விந்தக் காண்டம் பதினொரு படலங்களையும்; பழிபுரி காண்டம் 
 
 பன்னிரண்டு படலங்களையும்; போர்க் காண்டம் பதினெட்டுப் படலங்களையும் 
 
 கொண்டு திகழ்கின்றது.
தமிழகக் காண்டம் நானூற்று அய்ம்பத்து 
 நான்கு பாட்டுகளையும்; இலங்கைக் 
 காண்டம் அய்ந்நூற்றிருபத்து நான்கு பாட்டுக்களையும்; விந்தக் காண்டம் 
 
 அறுநூற்றைம்பத்தாறு பாட்டுக்களையும்; பழிபுரி காண்டம் அறுநூற்று முப்பத்தாறு 
 
 செய்யுள்களையும்; போர்க் காண்டம் எண்ணூற்று முப்பது பாடல்களையும் ஆக 
 
 மூவாயிரத்து நூறு பாடல்கள் பாடப் பெற்றுளது இந்நூலில்.
இந்நூலுள் அறுசீர் விருத்தம்; அறுசீர்க் 
 கட்டளை விருத்தம்; எழுசீர் விருத்தம்; 
 எண்சீர் விருத்தம்; கலி விருத்தம்; கலித்துறை: வஞ்சி விருத்தம்; 
 வஞ்சித் துறை; 
 கொச்சகம் ஆகிய பாவினங்கள் கையாளப் பெற்றுள்ளன.
பாவேந்தர் பாரதிதாசன்; பேரறிஞர் அண்ணா; 
 முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய 
 அறிஞர் பெருமக்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
 
						