Primary tabs
படலப் பாத்தொகை
(படலப் பாத்தொகை - படலத் தொகையும் பாத்தொகையும்)
அறுசீர் விருத்தம்
1. பாயிரத்தொடைங்
காண்டப் படலமைம் பத்தே ழாகிடமூ
வாயி ரத்தொடு பதிற்றுப்
பத்தா வணிபெற வேயாத்த
தாயி னித்திட வேபா
டுந்தனித் தமிழின் பாவினமா
ஏயி னித்த இராவண காவியம்
இனிதி னியன்றதுவே.
(இன்பா இனமா
- இனிய பானிமாக. ஏய் - பொருந்தி.)
ஷ வேறு வண்ணம்
2. ஆயநா னூற்றோ
டொன்பத் தாறைஞ்ஞூற் றறுநான் காக
ஏயறு நூற்றைம் பத்தா
றினுமறு நூற்றா றாறா
மூயவெண் ணூற்றா றைந்தா
முறைப்படுங் காண்டச் செய்யு
ளேயவெட் டிரண்டு பன்னொண்
றீரறு பதினெண் பாகே.
(ஏய, மூய - பொருந்திய, எட்டிரண்டு
- இரண்டு எட்டு, ஈராறு - பன்னிரண்டு.
பாகு - படலம். காண்டச் செய்ேள், காண்டப் படலம் எனக் கூட்டுக.)