தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தருமை ஆதீனப் பணி:

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ குருஞானசம்பந்தரால்தோற்றுவிக்கப் பெற்ற இத்திருத்தருமை ஆதீனம் அதுமுதல் வழி வழியாகவிளங்கி, மொழித் தொண்டும், சமயத் தொண்டும், சமூகத் தொண்டும் ஒல்லும்வகையெல்லாம் ஆற்றி வருகிறது. இப்பொழுது ஞானபீடத்தில் இருபத்தாறாவதுகுருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்எழுந்தருளியிருந்து அருளறப் பணிகள் பல இயற்றி அருளாட்சி புரிந்துவருகிறார்கள்.

வாழ்க தருமை ஆதீனம்! வளர்க குருபரம்பரை!

ஆய்வார் பதிபசு பாசத்தின் உண்மையை

ஆய்ந்தறிந்து

காய்வார் பிரபஞ்ச வாழ்க்கையெல் லாங்கல்வி

கேள்வியல்லல்

ஓய்வார் சிவானந்த வாரியுள் ளேயொன்

றிரண்டுமறத்

தோய்வார் கமலையுள் ஞானப்ர காசன்மெய்த்

தொண்டர்களே.

ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீ சீ
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்.

- ஸ்ரீ குருஞான சம்பந்தர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 14:30:31(இந்திய நேரம்)