Primary tabs
உ
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம்
ஆறாம் திருமுறை
அறக்கொடை
சைவப்பெரியார், சிவநெறிச் செம்மல்,
திரு. அ. ஆறுமுகம் எப். சி. சி. ஏ.
கோலாலம்பூர், மலேசியா.
இவர் 1907 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், சுளிபுரம், முந்தியந்தோட்டத்தில் திரு. குமாரு அருணாசலம் - பறாளை முருகன் அடியவர், திருமதி.தெய்வானை அம்மையார் ஆகியோரின் அரும் பெறற் புதல்வராய்ப் பிறந்தவர்,ஆரம்பக் கல்வியை, ஐக்கிய சங்க வித்தியாசாலையிலும், உயர்பள்ளிக்கல்வியை, சுளிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் சு. சிவபாதசுந்தரம்அவர்களிடமும் பயின்றவர். 1921ஆம் ஆண்டு மலேசியா வந்த அவர், சீனியர்கேம்பிறிட்ஜ் தேர்வில் தேறினார். சுங்கத்துறையில் எழுத்தராகி,கணக்கியல் உயர்நிலைத் தேர்வு எழுதி, கருவூலக் கணக்கராக உயர்ந்து ஓய்வுபெற்றவர்.
சமய நூல்களை ஆழ்ந்து கற்றவர். பல்வேறு சமய அமைப்புகளில்முக்கிய பதவிகள் வகித்துவருபவர். மலேசியாவில் அருள்நெறித் திருக்கூட்டஅமைப்பு உறுப்பினராகி, சித்தாந்த சாத்திர வகுப்புகளை நடாத்தி, இன்றுஅவ்வமைப்பின் புரவலராக உள்ளவர். குருபத்தி காரணமாய், திரு. சு.சிவபாதசுந்தரனார் நினைவு அறக்கட்டளை நிறுவி, ஆண்டுக் குருபூசையைத் தவறாதுநடத்தியும், அவர் நூல்களை மீள்பதிப்பித்தும் வருபவர்.
பெரிய புராணத்திற்கு ஆறுமுக நாவலர் எழுதிய சூசன உரை முற்றுப்பெறாமல் இருந்தது. யாழ்ப்பாணம், ஏழாலை, பண்டிதர் திரு. மு. கந்தையாஅவர்களைக் கொண்டு எஞ்சிய சூசன உரை எழுதுவித்தார். சிவதருமோத்தரம்என்ற துணை ஆகம நூலுக்கு மலேசியா, ஈப்போ, அறிஞர் திரு. இராமநாதன்அவர்களைக் கொண்டு உரை எழுதுவித்தார். அச்சுவேலி திரு. ச. குமாரசாமிக்குருக்கள் எழுதிய முப்பொருள் விளக்கம் என்ற நூலை ஆங்கிலத்தில்மொழிபெயர்க்கச் செய்தார். இவை யாவும் அச்சில் வெளிவருகின்றன.
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
என்ற குறளுக்கு (48) இலக்கியமாய் இவர் வாழ்வதற்கு வழிகாட்டிய இவரின்பெற்றோர் நினைவாக, இவர்தம்அரும் பொருள் தருமை ஆதீன ஆறாம் திருமுறை உரைவெளியீட்டிற்கு அறக்கொடையாக அமைகிறது.
குறிப்பு:
இத்திருமுறைப் பதிப்பின் விற்பனைத் தொகை மீண்டும்இத்திருமுறையைத் தொடர்ந்து வெளியிடப் பயன்படுத்தப்பெறும்.