Primary tabs
நீ
கேட்க’ என்று
வான்மொழியாக அருளிச்செய்தபடி
அநபாயச்சோழன்
முன்னர்
அரங்கேற்றப்பட்டபொழுது
அனைவராலும், ‘இது முன்னுள்ள திருமுறைப் பாடல்களோடு ஒத்த
திருவருட்பாடல்’ என்று உடன்படப்பட்ட காரணத்தால் பன்னிரண்டாந்
திருமுறையாகச் செப்பேடு செய்யப்பெற்றது.
அதனோடு திருமுறைகள்,
பன்னிரண்டு என்னும் வரையறை பெற்று விளங்குகின்றன.
“தோடுடைய செவியன்” என முதல் திருமுறையில் ஓகாரத்தில்
தொடங்கிய திருமுறை, பன்னிரண்டாந் திருமுறையில் “உலகெலாம்”
என்று மகர ஒற்றில் முடிந்தமையால், திருமுறைகள் பன்னிரண்டோடு
நிறைவு பெற்றுவிட்டன என்பது தெளிவு. திருத்தொண்டர்
புராணத்திற்குப் பின்னர்ச் சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தல்
முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வேறு பாடல்கள் தோன்றாமையே
இப் பன்னிரு திருமுறைப் பாடல்களோடு ஒத்த பாடல்கள் பின்னர்த்
தோன்றவில்லை என்பதைத் தெளிவாக்கும். இந்நிலையில் தேவார
திருவாசகங்கட்கு அடுத்த நிலையில் திருமுறைகளிற் சிறப்புப் பெற்று
விளங்குவன ‘திருவிசைப்பாதிருப்பல்லாண்டு’ என்னும் இரண்டுமாம்.
ஒன்பதாந்
திருமுறையாகிய திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு
இரண்டும் இசைத்தமிழாய் உள்ளன
என்பது முன்பே சொல்லப்பட்டது.
இவ்விசைகள்
பிற்காலத்து வந்த
வடமொழி இராகங்களாகச்
சொல்லப்படாமல்,
தேவாரங்களிற்போலவே பண்டைத்
தமிழ்ப்
பண்களாகச் சொல்லப்பட்டிருத்தல்
நினைவிற் கொள்ளவேண்டிய
ஒன்றாகும்.
இதனால். ஒன்பதாந் திருமுறைப்
பாடல்களுக்குப்
பிற்காலத்தில்
சிலர் இசை வகுத்து, அவற்றை இசைத்
தமிழாகச்
செய்தனர் என்பதற்கு இடன்
இன்றி, அவை தோன்றிய காலத்தே
இசைத்தமிழாகத்
தோன்றின என்பது தெளிவாகும்.
திருவிசைப்பாவை
அருளிச்செய்த ஆசிரியர் திருமாளிகைத்தேவர்
முதலிய
ஒன்பதின்மராவர். திருப்பல்லாண்டும் அவ்வொன்பதின்மருள்
ஒருவராகிய
சேந்தனாராலே அருளிச்செய்யப்பெற்றது.
எனவே,
ஒன்பதாந் திருமுறை ஆசிரியர்
ஒன்பதின்மர் என்பது தெளிவு.
இவ்வொன்பதாந்
திருமுறை தேவாரத் திருமுறைகள்போல
இசைத்தமிழால்
அமைந்து ‘திரு இசைப்பா’ எனப் பெயர்