தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெயர் விளக்கம்

இலைமலிந்த - மும்மையாலுலகாண்ட சருக்கங்களிற்கண்ட

பெயர் விளக்கம்


குறிப்பு :- கண்ணப்பநாயனார் புராணத்துப் பெயர்விளக்கம்

அவர் புராணத்திறுதியிற் காண்க.

(எண்கள் பாட்டுவரிசை எண்களைக் குறிப்பன)

அதிசூரன் - 612, 637. ஏனாதிநாத நாயனாருடன் தாய்
உரிமையுடையவனாய் அவரைப் பகைத்து நரகமடைந்தவன்.

அநபாயன் - 552. 213. தில்லைத் திருஎல்லை பொன்னின்மயமாக்கிய
வளவர் போரேறு. முதற்பகுதி பெயர்விளக்கம் பார்க்க.

அம்பிகாவனம் - 1136. காஞ்சிபுரத்தில் இறைவரது பூசைக்காகக்
காமாட்சியம்மையார் உளதாக்கிய நந்தவனம்.

அரசு - 862. திருநாவுக்கரசுநாயனார்; தாண்டகச் சதுரராகு
மலர்புகழரசு - 862.

அருகந்தர் - 980. சமணர் : சமண்கையர் : 981. வெஞ்சமண்பேர்
எக்கர் - 982. புன்மைச்செயல் வல்லமண்குன்டர் - 985. அமண் 991 - 1006.

அளகாபுரி - 1178. குபேரனது நகர்.

ஆகமவிதியின் வகுப்பு - 1164. ஆகமநூற் பரப்பின்றொகுதி 1223.

ஆதனூர் - 1041. திருநாளைப்போவார் நாயனார் அவதரித்த பதி.

ஆனாயர் - 933. ஆனாயநாயனார். அறுபான்மும்மை
நாயன்மார்களுள் ஒருவர்.

ஆனிலை - 555. கருவூர்த்தலத்தில் சிவபெருமான் விளங்க
எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலின் பெயர். (பக் - 706)

இட்டசித்தித் தீர்த்தம் - 1155. காஞ்சிபுரத்திலுள்ள புண்ணிய
தீர்த்தங்களுள் ஒன்று.

இந்திரன் - 1175. தேவரரசன்.

இமயமலை - 1162. பொன்மலை என்ப. பூலோக கைலாயம் இங்கு
உளது.

இரவி - 1175. சூரியன்.

இறவாத்தானம் - 1154. காஞ்சிபுரத்தில் உள்ள அற்புதத் தானங்களுள்
ஒன்று. (பக்கம் - 1479.)

உச்சி - 685, 689, 750. வானவீதியின் உச்சி இடம்.

உபநயனம் - 1219. மறையவர் முதலிய மூன்று வருணத்தார்க்கும்
ஏழுவயதளவில் செய்யத்தக்க பிரமோபதேசம் புரியும் சடங்கு; முந்நூலணியும்
கல்யாணம் என்பர்.

உமாதேவியார் - அம்பிகை - 1126; உலகையாளுடையாள் - 1127;
பெண்ணினல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து 1128; நங்கை 1129; 1139,
போக மார்த்த பூண்முலையினாள் 1129; எம்பெருமாட்டி 1130; தம்பிராட்டி
1132; மலை மடந்தை 1132; பொன்மலைவல்லி 1133, 1179; ஆளுடைய அம்மை
1134; மலை மகள் 1134, 1147; தொண்டை யங்கனி வாயுமை நங்கை 1135;
எம்பிராட்டி 1136, 1142, 1148; உயிர்கள் யாவையு மீன்றவெம் பிராட்டி 1137;
வரந்தரும் பொருளா மலைவல்லி 1138; அங்கயற்கண்ணி 1140; தன்னையே
யொப்பாள் 1140;

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 17:45:52(இந்திய நேரம்)