தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

மதுராபுரி - 971. மூர்த்திநாயனார் அவதரித்த பழம்பதி - மதுரை
என்று தேற்றம்பெற வழங்கப்பெறும். தலவிசேடம் (பக்கம் 1310) பார்க்க.

மலைநாடு - 1081. சேரர்நாடு. (பக்கம் 1404).

மருதயாழ் - 1110. மருதநிலத்துக்குரிய யாழ்வகை.

மாற்பேறு - 1108. திருமாற்பேறு. தொண்டை நாட்டில் தேவாரம்பெற்ற
தலங்களுள் ஒன்று. (பக்கம் 1430). விட்டுணுமூர்த்தி இறைவனைப் பூசித்துச்
சக்கரப்பேறு பெற்ற திருத்தலம்.

மாமல்லை - 1118. மாவலிபுரம். (பக்கம் 1442).

மானக்கஞ்சாறனார் - 872. அறுபான்மும்மை நாயன்மார்களுள்
ஒருவர். கஞ்சாறர் 885. ஏயர்கோன் கலிக்காமநாயனாரின் மாமனார்.

முருகனார் - 1021. முருகநாயனார். அறுபான்மும்மை
நாயன்மார்களுள் ஒருவர். திருஞானசம்பந்தர் திருமணத்தில் சோதியினுள்
முத்தி பெற்றவர்களுள் ஒருவர்.

மேற்கானாடு - 1041. நந்தனார் அவதரித்த நாடு. சோழநாட்டின்
உட்பிரிவுகளுள் ஒன்று.

மேன்மழ நாடு - 926. ஆனாய நாயனார் அவதரித்த நாடு.

யோகபீடம் - 1160. காஞ்சிபுரத்தில் முனிவர்களும் யோகிகளும்
இருக்கும் அற்புதத் தானம்.

வல்லம் - 1107. திருவல்லம் என்பர். தொண்டை நாட்டில்
தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. (பக்கம் 1429).

விசாரசருமனார் - 1217. சண்டீச நாயனாரது பிள்ளைத் திருநாமம்.

விநாயகக்கடவுள் - அஞ்சு வான்கரத் தாறிழி மதத்தோ ரானை 1158.

வென்றிமங்கை - 718. செயலெட்சுமி என்பர்.

வைரவக்கடவுள் - அரையிருட் டிரியு மஞ்சு நீள்வது போலுமா
மேனி மலர்ப் பதங்களில் வண்சிலம் பொலிப்ப, நஞ்சு பில்கெயிற் றரவவெற்
றரையினாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை 1158. சிவகுமாரர்கள்
நால்வருள் ஒருவர்.

இரண்டாம் பகுதியின் மேற்கோள் நூலகராதி

(எண்கள் பாட்டு வரிசைஎண் குறிப்பன)

அகிலாண்டநாயகி பதிகம் 803.

அருணாசல புராணம் 1120.

அற்புதத் திருவந்தாதி 778, 811, 908, 934, 981, 1052, 1060, 1169.

ஆசாரக்கோவை 808.

ஆத்திசூடி 759.

ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை 562.

இறையனாரகப்பொருள் 1122.

ஈங்கோய்மலை எழுபது 926.

உண்மை விளக்கம் 960.

ஐயடிகள் காடவர் கோனாயனார் க்ஷேத்திர வெண்பா 692, 1015.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 17:56:17(இந்திய நேரம்)