தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thiruthondar Puranam-மேல்-ஐந்தாம் பகுதியின் முன்னுரை

 
 


சிவமயம்

 

ஐந்தாம் பகுதியின் முன்னுரை
 

 
1. நான்காம் பகுதியின் பின், சரியாய் 1 ஆண்டும் நான்கு மாதங்களும் கூடிய கால அளவில் இப்பகுதி வெளிவருதல் திருவருளின் துணையாலாகியது. புராணத்துள் எஞ்சிய பகுதிகளும் இவ்வளவின் விரைவில் வெளி வருவனவாகில் இன்னும் ஒன்றரை ஆண்டெல்லையில் உரை முழுதும் அச்சுநிறைவு காணலாம். அன்பர்கள் கரும் ஊக்கமும் உதவிகளும் திருவருளும் முன்னிற்க.
 
 
2. இப்பகுதியில் ஆளுடையபிள்ளையார் புராணம் பிற்பகுதி முழுமையும் வெளி வருகின்றது. இது வம்பறாவரிவண்டுச் சருக்கத்தின் II பாகமாகும். அச்சருக்கத்தின் எஞ்சிய ஏனைய புராணங்கள் (வம்பறாவரிவண்டுச் சருக்கம் III பாகம்) VI பகுதியாகவும், பெரியபுராணத்துள் அதன்மேல் உள்ள ஏழாவது "வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்" முதல் பதின்மூன்றாவது வெள்ளானைச் சருக்கம் வரை ஏழு சருக்கங்களும் VII பகுதியாகவும் வரவுள்ளன.
 
 
3. இப்பகுதி வெளியாகுமிடையில் இவ்வெளியீட்டுக்கு எல்லா வகைகளாலும் பேரூக்கமும், உதவியும் தந்தருளியிருந்த ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் என்னும் முனிவர்பெருமான் சென்ற விரோதி ஆண்டு சித்திரைத் திங்கள் 10-ம் நாள் திருத்தில்லையில் இறைவன் றிருவடி சார்ந்தனர். அந்நிகழ்ச்சி இவ்வெளியீட்டுக்குப் பெருத்த நட்டமாகும்; அதுபற்றி முன்னரே அறிவித்துள்ளேன். திருஞானசம்பந்த நாயனார் புராணத்துள் மூன்று பாகங்கள், விரும்பும் அன்பர்கள் இலகுவில் பெற்றுப் பயனடையும் பொருட்டுத் தனி வெளியீடுகளாகப் பதிக்கப்பட்டுள்ளன; அவை (1) திருப்பாசுர விளக்கம்; (2) பூம்பாவை; (3) ஆளுடைய பிள்ளையார் திருமணம் என்பவையாம். அவற்றுடன், வழிபாட்டுக் குதவும்பொருட்டு ஆளுடைய பிள்ளையார் துவாதச நாமார்ச்சனை என்னும் பன்னிருபெயர்த் துதியும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. அக்கருத்துடனே ஆளுடைய பிள்ளையார் 108 பெயர்த் துதியும், 1000 பெயர்த் துதியும் வெளியாக வேண்டும் என்னும் கருத்துடன் எரிய முயற்சிகளும் செய்து வருகின்றேன். சரிதச் சுருக்கமும் தனியாக வெளிவந்துள்ளது.
 
 
4. உரை எழுத்துப் பணி நிறைவு விழா சென்ற 13-7-48ல் சிதம்பரத்திற் கொண்டாடப்பட்டது பற்றி அன்பர்களுக்கு முன்னமேயே விரிவாக IV பகுதியில் அறிவித்துள்ளேன். இப்போது ஆளுடைய பிள்ளையார் புராண உரை அச்சு நிறைவு விழா நாளது வைகாசித் திங்கள் 19-ம் நாள் (1-6-1950) திருநல்லூர்ப் பெருமணம் என்னும் ஆச்சாபுரத்தில் பிள்ளையாரது திருநாட் சிறப்புடன் நடைபெற உள்ள செய்தியை அன்பர்களுக்கு மகிழ்வுடன் அறிவித்துக்கொள்கின்றேன். திருவருளும் பெரியோர்களின் ஆசியும் அன்பர்களின் ஆதரவும் முன்னிற்க. ஆளுடைய பிள்ளையார் புராணத் தொடக்கம் முதற்சஞ்சிகை வெளியீடு 25-4-47ல், அவர் அவதரித்ததும் திருஞா முண்டருளி விளங்கியதுமாகிய சீகாழிப் பதியில், தருமபுர ஆதீனம் மகா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:38:20(இந்திய நேரம்)