தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thiruthondar Puranam-மேல்-பெயர் விளக்கம்

 
 
முன் சேர்க்கை - 3
 


சிவமயம்

 

பெயர் விளக்கம்

 

எண்கள் - பாட்டு எண்கள்

 
அதிகை வீரட்டானம் - 2862. நடுநாட்டுப் பதிகளுள் ஒன்று. அட்டவீரட்டானங் களுள் ஒன்று; புரமெரித்த வீரம் நிகழ்ந்த பதி.
 
அநபாயன் - 2745. II குலோத்துங்கச் சோழர்; பெரிய புராணம் பாடக் காரணமாயிருந்த அரசர்
 
ஆப்பனூர் - 2783. பாண்டி நாட்டுப் பதிகளுள் ஒன்று.
 
ஆளுடைய பிள்ளையார் - அந்தணர் வாழ்வு 2651; அம்பொன் மலைக்கொடி முலைப்பால் குழைத்த ஞானத் தமுதுண்ட பிள்ளையார் 2916; அருமறைவாழ் பூம்புகலி யண்ணலார் 2679; அன்பின் பெய்ம்மையுரு 2921; ஆறுசூடினார் திருமகனார் 2972; இன்னருட் பிள்ளையார் 2765; உடைய பிள்ளையார் 2964; உலகனைத்து மீன்றளித்த அம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆரமுதுண்டார் 3065; எண்ணில் பாக்கியப் பயனாயுள்ள பாலறாவாயர் 2636; கவுணியர்தங் காவலனார் 2892; காழிநாடுடையவர் 2951; காழியினில் வந்த கவுணியர்தம் போரேறு 2040; சண்மைப் புரவலர் 2634, 2641; சண்பை முதல்வனார் 2623; சண்பையர் பெருமான் 2552; சண்மைபயர் வள்ளலார் 2584; சண்பையாளி 2812; சண்மையாளு மன்னர் 2887; சண்மைவந்த வடலேறு 2810; சிவக் கன்று 2569; சூகரமு மன்னமுமாய்த் தேடினா ரிருவருக்கும் தெரிவரியார் திருமகனார் 2894; செய்ய மேனியர் திருமகனார் 2605; சைவ சிகாமணி 2918; ஞாலமிரு ணீங்கவரும் புகலி வேந்தர் 2907; ஞானத்தின் றிருவுரு 2626; ஞானபோனகங் 2543; ஞானப் புங்கவர் 2752; ஞான மணிவிளக்கு 2550; ஞானவா ரமி்தமுண்டார் 2658; தவநெறி வளர்க்க வந்தார் 3149; தவவரசு 3104; தனிப் பொருப்பின் மங்கை திருமுலைப்பா லுண்டருளும் வள்ளலார் 2848; திருக்கழுமலத்தார் செல்வர் 2662; திருக்கழுமலத்தார் வேந்தர் 2592; தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர் 3151; தெய்வ மலைமகள் குழைத்த ஞானமுண்டவர் 2749; தென்றமிழ் வளங்கவந்த திருக்கழுமலத்தான் 2708; தேனக்க மலர்க் கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும், கானத்தின் எழு பிறப்பு 2626; நாயகப் பிள்ளையார் 2622; நான்மறையின் றனித்துணை 2626; நீடிய ஞானம்பெற்றார் 2705; நீற்றணி திகழ்ந்த மேனி நிறைமதிப் பிள்ளையார் 2711; பரசமய கோளரி 2554, 2802; பரசமயங்கள் வீழ்த்தார் 3126; பானறுங் குதலைச் செய்ய பவளவாப் பிள்ளையார் 2700; புகலிய ரிறைவர் 2564; புண்ணியப் பிள்ளையார் 2760; புண்ணிய விளைவு போல்வர் 3123; பெரும்புகலிப் பெருந்தகையார் 2895; பெறற்கரும்பே றுலகுய்யப் பெற்றருளும் பிள்ளையார் 2896; மண்ணில் வளர் மதிக்கொழுந்து 2626; மண்ணினுக் கிடுக்கண் டீர வந்தவர் 3119; மண்ணெலா முய்யவந்த வள்ளலார் 2760; மன்றுளா ரளித்த ஞான வட்டில் வண்கையன் 2708; மாதவத்தோர் பெருவாழ்வு 2771; முத்தமிழ் விரகர் 2678; மும்மைத் தமிழின் வேந்தன் 2812; முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் 3120; மைதிகழுந் திருமிடற்றார் அருள்பெற்ற வான்பொருள் 2771; மெய்ஞ்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:42:49(இந்திய நேரம்)