தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thiruthondar Puranam-மேல்-திருஞானசம்பந்தரைப் பற்றிய சில குறிப்புகள்

 
 


சிவமயம்

திருஞானசம்பந்த நாயனார் புராணத்தைப் பற்றிய

சில குறிப்புகள்

திருவிடைவாய் :- இது சோழ நாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று. தஞ்சைச் சில்லா நன்னிலந் தாலூகாவைச் சேர்ந்தது. திருவாரரூருக்கும் நீடாமங்கலத்துக்கும் இடையில் உள்ள கொரடாச்சேரி என்ற ரயில் நிலையத்திலிருந்து தெற்கில் 2 நாழிகையளவில் உள்ள பாண்டவாறு என்னும் நதியின் கரையில் தென்புறமுள்ளது. பாண்டவாறு என்பது காவிரியின் பிரிவுகளாகிய கிளைகளுள் ஒன்று. இதற்கு ஆளுடைய பிள்ளையார் பதிகம் கிடைத்துள்ளது. இத்திருப்பதிகம் முன் அகப்படாததனால் முன் பதிப்புக்களில் சேர்க்கப்படவில்லை. அது முழுதும் அத்திருக்கோயில் சுவரில் கல்வெட்டுச் செதுக்கப்பட்டிருத்தலால் ஆராய்ச்சியாளர்கள் அதைக் கண்டுபிடித்து எடுத்து எழுதி வெளியிட்டபடி இப்போதுள்ள தேவாரப் பதிப்புக்களிற் சேர்க்கப்பட்டுள்ளது. "பாதாளீச்சரமும் பாடி முன்னணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி"(2794) என்றதனுள் பதிபிறவும் என்ற பகுதி இப்பதியினை உள்ளிட்டுக் குறிக்கலாம் என்று சில அன்பர்கள் கருதுகின்றார்கள். இப்பதிகம் "மறியார் கரத்தெந்தை" என்று தொடங்குகிறது. 11-ம் திருமுறை « இத்திர வெண்பா-(7) "தென் விடைவாய்" என்றது இப்பதி.
கல் வெட்டுக்களிற் கண்ட சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள் :-
(இவை வித்வான் திரு.வி. M ராஜமாணிக்கம் பிள்ளை, M.O.L., L.T., அவர்கள் அன்புடன் அனுப்பிய குறிப்புக்களுட் கண்டவை.) திருஞானசம்பந்த நாயனார் வரலாறு பற்றிய கல்வெட்டுக்கல் இல்லை; அவர்பெயராற் பிற்காலச் சோழர் காலத்தில் மடங்கள், தோட்டங்கள் முதலியவை வழங்கி வந்தன என்பதும், சில தானங்கள் விடப்பட்டன என்பதும் தெரியவருகின்றன. (1) சீகாழியில் "ஆளுடைய பிள்ளையார் திருமாளிகையில் தமிழ் விரகர் கண்டு, இக்கோயில் திருக்கைக்கோட்டியில் எழுந்தருளியிருக்கிற முறைகள் திருக்காப்பு நீக்கி அழிவுள்ளன எழுந்தருளுவித்தும், திருமுறைகள் பூசித்தும் இருக்கைக்கு இவ்வூர் இ றையிலியாக விட்ட நிலம்......." என்பது II குலோத்துங்கள் - 1-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (381 - 1918);--(2) அம்மன்னரது 10-வது ஆட்சியாண்டு :-- "திருஞான சம்பந்தருக்குப் பால் போனகத்திற்கு நிலம் விடப்பட்டது"(374 ஷீயீ 1918):-- (3) அம் மன்னர் 12-வது ஆட்சியாண்டு :-- ஆளுடைய பிள்ளையார் கோயிலில் எழுந்தருளுவித்த மங்கையர்க்கரசி நாச்சியாருக்கு நிவேதனத்துக்கு வீரசோழ நல்லூரில் நிலம் விடப்பட்டது (375 ஷீயீ 1918) [குறிப்பு: இந்த இரண்டாம் குலோத்துங்கர் தாம் அநபாயர் என்ற மன்னர் என்றும், சேக்கிழார் பெருமான் காலத்தவர் என்றும் அறியப்படுபவர்);- (4) II இராஜாதிராஜன் - ஆட்சி 11-வது ஆண்டு - ஆளுடைய பிள்ளையார் கறியமுதுக்குப் பயறு கொடுக்க நிலம் விடப்பட்டது (379 of 1918) :- (5) III குலோத்துங்கர் - ஆட்சி 6-வது ஆண்டு - இராஜ விச்சாதரி என்பவள் ஆளுடைய பிள்ளையாரை (புதிதாக) எழுந்தருளச் செய்தாள் (361 of 1918) ;- (6) குரத்தி ஓட (திருஞான சம்பந்தர் புராணம் 639 = 2536) குரத்தியர் - சமணப் பெண்துறவிகள்; இவர்களுக்குத் தனி மடம் உண்டு. I பராந்தகன் காலத்தில் விளாப்பாக்கத்தில் குரத்தியர் மடம் இருந்தது. அதன் தலைவியார் பத்தினிக் குரத்தியடிகள் என்பவர் (53 -1900); வெடிலில் இருந்த மடத்தில் 400 பேருக்கு மேற்பட்ட குரத்தியர் இருந்தனர் (S.S.I.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:49:10(இந்திய நேரம்)