தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

J2/54 dated 22-6-54.)1 உத்தரவு செய்துள்ளார்கள். மேற்படி உத்தரவின் நகல் இதில்
தனியாய்க் குறிக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி எனது மனமார்ந்த நன்றியைச்
செலுத்துகிறேன். மேலதிகாரியின் இவ்விதமான உத்தரவு இதுவரை இல்லாமையினாலே
நகரசபைகள், (Municipality) ஜில்லா சபைகள், (District Board) தனிப்பட்ட
அதிகாரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தார்கள், (Private Management Schools and Colleges)
பொதுப்புத்தகசாலைகள் (Public Libraries) இவைகளின் உபயோகத்திற்கு இந்தப்
பேருரைகளை வாங்குவதற்கு ஒரு தடை இருந்தது. மேற்படி உத்தரவினால் தடை
நீங்கிவிட்டதனால் மேலே குறித்த எல்லாத் தாபனங்களின் அதிகாரிகளும்
இப்பேருரையின் பிரதிகளை வாங்கிப் பயன்படுத்துவார்களென்று நம்புகிறேன்.
இதுபோலவே இந்து சிவ-வைஷ்ணவ-தேவஸ்தானத்தின் புத்தகசாலைகளுக்கும்
இப்பிரதிகளை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ள அதிகாரிகள் உத்தரவு செய்வார்கள்
என்று நம்புகிறேன்.

பொருள் உதவிகள்

இவ்வேழாம் பகுதிக்குமுன் இவ்வுரை வெளியீட்டுக்குப் பற்பல பொருளுதவிகள் பல
பெருமக்களிடமிருந்து பெற்றேன். அவற்றைப்பற்றி அவ்வப்போது முன்னமே
தெரிவித்து நன்றி செலுத்தியிருக்கின்றேன். சைவ ஞானத் திருப்பெரு மடங்களின்
அதிபர்களும், சென்னைப் பல்கலைக் கழகமும் மற்றும் பல அன்பர்களும் பெரும்
பொருளுதவி செய்துள்ளார்கள். அவையெல்லாம் காலத்தினாற் செய்த நன்றியாக
இவ்வெளியீட்டுக்குப் பேருதவி புரிந்தன. இனி,
______________
1 Proceedings of the Director of Public libraries Madras. Roc. No. 265 J2/54 dated
22-6-54.
Sub :- Libraries - Books and publications. "Periyapuranam" by Sri. C.K. Subramanya
Mudaliar purchase of copies for use in public libraries commended.
The Director Commends the purchase of copies of the book mentioned below for
use in all public libraries in the State.
Periyapuranam - in content in 4 Volumes by Sri C. K. Subramanya Mudaliar.
The Cost of the each of the Volumes is as detailed below:-
       Vol. III Rs. 13-8-0 Vol. IV Rs. 12-8-0
       Vol. V Rs. 13-8-0 Vol. VI Rs. 13-8-0
       Vols I and II of the above book are out of stock.
2. Copies of the book may be obtained from C.K. Subramanya Mudaliar, B. A.,
Vysiyat St., Coimbatore.
3. The undermentioned officers are requested to bring this circular to the notice of
the Managements of all public libraries in their jurisdiction.

(Sd.) N. R. Perumal Mudaliar.
For Director of public libraries.

To
The District Educational officers.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 19:03:36(இந்திய நேரம்)