Primary tabs
திரு.தருமலிங்கம் பிள்ளை யவர்களும் இப்புராண
உரைப் புரூப்களைப் பார்த்து
அவ்வப்போது அரிய திருத்தங்கள் செய்து
உதவிவந்தார்கள். இவர்களும் புராண
உரை நிறைவெய்துவதற்குமுன் இறைவன் திருவடி எய்தி
விட்டார்கள்.
திருப்பணி செய்துதவிய அன்பர்கள்
குருக்களையா அவர்கள் தொடக்க முதல் உரை நிறைவுவரை புரூப்களைத் திருத்தியும்
அரிய திருத்தங்கள் உதவியும் மற்றும் பல வகையாலும் இவ்வுரைக்கு வேண்டிய
எல்லா உதவிகளும் செய்துள்ளார்கள். அவர்கள் எனது தீட்சா குருவினுடைய
தம்பியாரின் மகனாவார். அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும் உரியது. தருமபுர
ஆதீன வித்துவான் திரு. முத்து, மாணிக்கவாசக முதலியார் அவர்களும் பல
ஆண்டுகள் புரூப்கள் திருத்தி உதவினார்கள். சென்னை திரு. R. சண்முகசுந்தரஞ்
செட்டியாரவர்கள் புராண அச்சுத் தொடக்கமுதல் பல ஆண்டுகள் இவ்வுரை
வெளியீட்டுக்கு வேண்டிய எல்லா உதவிகளும் செய்தார்கள். திருத்துறையூர் அன்பர்
திரு. K. ஆறுமுக நாயனார் அவர்கள் புராண உரைக்குப் படங்களெடுத்துதவியும்,
காகிதம் முதலிய பெறுவதற்கு வேண்டிய உதவிகள் செய்தும் தலக்குறிப்பு
பெயர்க்குறிப்பு முதலியவைகளைத் தொகுத்தும், மற்றும் அச்சுக்கூடத்தார் மூலம் பெற
வேண்டிய உதவிகளை எல்லாம் செய்தும், கொடுத்தும் இவ்வுரையை நிறைவு
காணவேண்டுமென்னும் பேரவாவினாலும் அளவிடற்கரிய பல பணிகள்
இந்நிறைவுவிழாவின் நிறைவுவரை உடனிருந்து உதவியுள்ளார்கள். விழாவிலும்
நேரில்வந்து சிறப்பித்தார்கள். வறுமையிற் செம்மை என்பது இவர்களிடம் காணும்
அரிய சிறப்புக்களுள் ஒன்றாகும்.
அருமையான கருத்துக்களையும் திருத்தங்களையும் தமது முதுமையையும்
உடல்நிலைத் தளர்ச்சியையும் கருதாமல் உதவியுள்ளார்கள். இவ்விதமான
பணிகளுடன் தமது மனம், மொழி, மெய்களால் உரைத்தொடக்க முதல் புராண உரை
நிறைவு விழாவரையில் பற்பலவிதமான பேருதவிகளும் செய்த பேரன்பர்கள்
பலருண்டு. அவர்கள் எல்லோரையும் இங்கே குறித்துக் கூறுதல் இயலாமையால்
பொதுவகையால் அவர்களுக்கு நன்றி கூறுதல் மட்டில் அமைகின்றேன். உதாரண
முகத்தால் சில அன்பர்களை மட்டும் எடுத்துக்கூறி மேலே கூறிய பேரன்பர்களுக்கும்,
தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த கடப்பாடுடைய நன்றியைத் இருந்து,
இப்பொழுது திருநெல்வேலி சில்லா அம்பாசமுத்திரத்தில் ஆதீன இன்ஸ்பெக்டராக
இருக்கும் அன்பர் திரு தா. ஆறுமுகம் பிள்ளை அவர்களுடைய பெயர் இத்
தொண்டர் கூட்டத்தில் முதலாவதாக நினைக்கவருகின்றது. கோயமுத்தூரில் லைப்
பெனிபிட் ஸொஸைடியில் அலுவல் பார்த்துவரும் திரு S.நமசிவாயம் அவர்களும்,
கோயம்புத்தூர் முனிஸிபல் ஹைஸ்கூல் தமிழாசிரியர் வித்வான்