தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


முருகா
முன்னுரை

முருகப் பெருமானுடைய திருவருள் முழுவதும் பெற்ற முனீந்திரர் அருணகிரிநாத சுவாமிகள். இந்த ஞானாசாரியர் உலகம் உய்யப் பாடிய அற்புத ஞானத் தமிழ் திருப்புகழ்.

இந்த ஐந்தாம்படைவீட்டுத் திருப்புகழின் பிற் பகுதியும் 6-ஆம் படைவீட்டுத் திருப்புகழும் உரையுடன் இப்போது வெளிவருகின்றது.

பலகாலமாக உயர்ந்த தமிழ் நூல்களை அச்சிட்டு, செந்தமிழுக்குத் தொண்டு செய்யும் சென்னை வானதி பதிப்பகம் உயர்திரு. ஏ. திருநாவுக்கரசு அவர்கள் இந்த ஐந்தாம்படை வீட்டின் பிற்பகுதியையும் 6-ஆம் படை வீட்டுத் திருப்புகழ் உரையையும் அச்சிட்டு அன்பர்கட்கு வழங்குகின்றார்.

இது மிகச் சிறந்த நற்பணியாகும். இதனை அன்பர்கள் ஓதி உய்வு பெறுக.

அன்பன்
கிருபானந்தவாரி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-09-2017 14:57:44(இந்திய நேரம்)