Primary tabs
-
சொல்லி வந்ததினாலும், எனக்குள் ஆதிதொடுத்துள்ள பிரீதி
வரவரக் கதித்து வந்ததினாலும், காலங்குறுகாது நீடித்ததினாலும்,
சும்மா வீண்காலம் போக்குவதில் இஷ்டமில்லாததினாலும், இது
வைதீக காலக்ஷேபமாக வாய்த்ததினாலும், மனசில்
ஊக்கமுண்டாகித் தொடர்ச்சியாய் விடாப்பிடியாய் முழு பலத்தோடு
முயற்சித்து வந்தேனெனினும், ஆண்டாண்டு நேர்ந்த பல
விக்கினங்கள் இடையூறுகளால் தடுக்கலுற்று இடைக்கிடை சிறிது
காலம் ஒரு செய்யுளாவது எழுதவும் வாய்க்காமற் கழிந்து
போனதுமுண்டு. ஆயினும், தேவாநுக்கிரகம் முற்றுப்பெறச் செய்தது.
கடவுளுக்கே ஸ்தோத்திரம்.3. 'இரக்ஷணிய யாத்திரிகம்' என்ற தென்னையெனில், - ஆன்ம
ஈடேற்றத்தை விரும்பியோருடைய உள்ளத்து அப்பேறு
லபிக்குமட்டாக வைதீக மார்க்கத்து நிகழும் சிந்தா யாத்திரையின்
ஆதியோடந்தமான சம்பவங்களின் விர்த்தாந்தத்தை விளக்கிக்
காட்டுகிற நூல் என்பதேயாம். அஃது எவ்வாறெனில், அதன்
பொழிப்பு வருமாறு:-அநாதிநித்திய ஸ்வயம்புவாய், அகண்ட பரிபூரண வஸ்துவாய்,
அனந்த கல்யாண குண சகிதராய்ச், சகலலோக துரந்தரராய்,
வீற்றிருக்கின்ற திரியேக தெய்வமாகிய கடவுள்வேந்தன்,
பூமண்டலத்தைச் சிருஷ்டித்து, அதில் தம்முடைய ராஜ்யத்தை
ஸ்தாபித்து, பிரஜைகளுக்கு விதிநிஷேதங்களை ஏற்படுத்தி, சகல
நன்மைகளையும் பிரதிதினமும் அருளிச்செய்து, செங்கோல்
செலுத்தி, அரசாண்டு வருகிறாரென்பதையும், - பூர்வந்தொடுத்து,
ராஜ துரோகியாய், ராஜ்ய விரோதியாய் ஏற்பட்ட பைசாஸத்
தலைவன், இவ்வுலகத்துப் பூர்வகுடிகளாகிய மனுப் பிரதமரையும்,
அவர் வழிப்பட்ட சகல சந்ததி பரம்பரைகளையும் வஞ்சித்து,
மருட்டி, துர்ப்போதனைசெய்து, பரலோக ராஜரீகப் பிரமாணங்களை
மீறும்படியேவி, உலக சிற்றின்பங்களை யூட்டித் தன்னுடைய
அரசாட்சியை ஸ்தாபித்தானென்பதையும், - இச்சம்பவத்தைப்
பரலோகத் தரசன் அறிந்த மாத்திரமே, பசாசடிப்பட்ட தம்முடைய
பிரஜைகளை மீட்கக் கருதி, ஆரம்பகாலத்திற்
'கிரியை யுடம்படிக்கை' என்ற பூர்வ பிரமாணத்தைச் சித்தஞ்செய்து,
தம்முடைய பரமராஜ்யக் குடிகளாய் மனந்திரும்பி அதை
யடையத்தக்கதாகத் தாம் ஏற்படுத்திய பூர்வ பாதையைப்
பற்றிக்கொள்வோருக்கு இன்ன பிரகாரம் அவர்கள்
மீறுதல்களெல்லாம் மன்னிக்கப்படுமென்றும், நித்திய பேரின்பம்
அருளப்படுமென்றும் விளம்பரப்படுத்திப் பூர்வ ஏற்பாட்டை
ஸ்தாபகஞ் செய்தாரென்பதையும், - பின்பு தக்க காலத்தில்
தம்முடைய குமாரனாகிய இளவரசரை நிலவுலகத்தில் விடுத்து,
அவர் மூலமாய்க் 'கிருபையுடம் படிக்கை'யை விளம்பரப்படுத்தி,
பசாசையும் மனந்திரும்பிவராத அவன் சைநியங்களையும்
ஜெயித்து, உலகத்திற் பிரதமத்தில் விதித்த சுதர்ம்மத்தை
நிலைப்படுத்திப் பூர்வ ராஜபாதையைப் புதுக்கி, அவ்வழி பிடித்துப்
பரலோக யாத்திரை செய்ய வருவோருக்குக் கடைசிமட்டுந் துணை
நின்று, நித்திய பேரின்ப ராஜ்யத்தை யடைவிக்கிறாரென்பதையும்,
- அதிபூர்வந் தொடங்கி ராஜபாதை பிடித்துப் பிரயாணஞ்செய்து
பரம ராஜ்யத்தை யடைந்தவர்களில் முக்கியமான ராஜபக்தர்
இன்னின்னார், அவருடைய விர்த்தாந்த மிதுவிது