தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-அணிந்துரை

 
அணிந்துரை

வரம்பெற்ற மறைநூல் வல்லோர் பலர் எழுதிய இறையியல் இலக்கியங்கள் பல மறைந்து போயின.

பாளையங்கோட்டை மகாகவி கிருஷ்ணபிள்ளை எழுதியதாகக் கூறப்படும் 'இரட்சண்யக் குறள்' மறைந்து போயிற்று. அவர் எழுதிய 'போற்றித் திரு அகவல்', எச். ஏ. கிருஷ்ணபிள்ளை கிறிஸ்தவனான வரலாறு' 'இரட்சண்ய சுயசரிதை' 'இரட்சண்ய சரிதம்' முதலிய மறையவிருந்த நூற்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நூல் வடிவு பெற்றுள்ளன.

இராவ்சாகிப் அருள்திரு M. ஆசீர்வாதம் அவர்கள் எழுதிய 'திருஅவதாரம்' என்ற கவிதைகள் அடங்கிய பழைய நோட்டு ஒன்றை அவர்தம் மைந்தர் திரு. ஆர்தர் ஆசீர்வாதம் அவர்கள் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தது தமிழ்நாடு செய்த தவப்பயனே ஆகும்.

முழுநீள நோட்டில் 158 பக்கங்கள் பழங்காலக் கருப்பு மையினால் எழுதியிருந்த அந்நோட்டைப் பார்த்தபோது எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது.

இரட்சண்ய யாத்திரிகம், இரட்சண்ய மனோகரம், இரட்சண்ய சமய நிர்ணயம், முக்தி வழி அம்மானை முதலிய இலக்கியங்களை முதன் முதலாகப் பழம் நற்போதக வாயிலாகப் படித்து இன்புற்று பின்பு முழு நூல்களைத் தேடி அலைந்து அரிதாகப் பெற்று கற்றுப் பயனடைந்தவன் யான் எனவே, 'திரு அவதாரம் நற்போதகத்தில் பிரசுரமாகி இருக்கவேண்டுமே' என்று ஆய்வு செய்ய ஆரம்பித்தேன்.

பேரின்ப இலக்கியங்கள் பல பிறப்பதற்குக் காரணமாக இருந்த திருநெல்வேலித் திருமண்டல நற்போதகத்தில் இச்செய்தி வெளியாகியுள்ளதா என்ற தாகத்தில் நான் சென்ற இடமெலாம் பழம் நற்போதகங்களைத் தேடி அலைந்தேன். பழம் நூற்சுவடி படிப்பகங்களிலும் துழாவினேன். 1936 பெப்ருவரி நற்போதகம் 43, 44, 45ஆம் பக்கங்களில் திரு அவதாரக் கவிதைகள் முதன் முறையாகப் பிரசுரமாகியுள்ளதைக் கண்டுபிடித்து அளவிலா ஆனந்தம் கொண்டேன். திரு. ஆர்தர் ஆசீர்வாதம் அவர்களிடம் காண்பித்து ஊக்கம் ஊட்டினேன். கடந்த பல ஆண்டுகளாக நற்போதக இணை ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் எனக்கு இது மிகப் பெருமையாகவும் இருந்தது.

'திரு அவதாரனின் வெற்றி - உயிர்த்தெழுதல்' என்ற உபதலைப்பில் 23 பாடல்களும், 'காட்சி - மரியாள் மற்றும் மாதருக்கு' என்ற உபதலைப்பில் 128

 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 14:41:24(இந்திய நேரம்)