அகம்
-
உள்ளிடம்,
உள்ளம், மனம்
அகவயின்
-
உள்ளிடத்தில்
(தன்னுள்)
அகல்வோர்
-
உடனிருக்கும்
தகுதியில்லாதவர்
(கீழ் மக்கள்)
அகன்
-
மனம்
(அகம் என்பதன் போலி)
அகில்
-
மணமுள்ள
ஒரு வகை மரம்; நறுமணத்தின்
பொருட்டு புகைக்கப்படுவது.
அஞ்செழுத்து
-
'நமசிவாய'
என்னும் திருஐந்தெழுத்துக்கள்
அடக்கம்
-
ஒடுங்கியிருத்தல்
அடங்கிய
-
வெளித்தோன்றாது
தணிந்த
அடர்
நிலைப்
பார்வை
-
வாளால்
செய்யும் போரில், நெருங்கிநின்று,
போர் செய்வதற்குக் குறிவைத்தல்
அடாக்
கிளவி
-
பொருந்தாச்
சொல்; தகாத
சொல்
அடுதல்
-
சமைத்தல்;
வருந்துதல்; கொல்லுதல்.
அடை
கிளைத்த
-
சேர்ந்து
பல்கிய
அடைப்ப
-
செய்யாமல்
தடுப்ப
அண்ணல்
-
உயர்ந்தவன்
(தலைவன்)
அண்ணாந்த
-
மேல்
நோக்கிய, இறுமாந்த
அணக்கும்
-
மேல்
நோக்கி வாய் திறக்கும், தலை தூக்கிப்
பார்க்கும்
அணங்காட்டு
முதியோள்
-
குறி சொல்பவள்;
சாமி யாடுபவள்;
தேவராட்டி
அணங்கினை
-
துன்பம்
உற்றாய்
அணங்கு
-
அழகிய
பெண் (தலைவி), தெய்வம்
ஏறியுள்ளவள், துன்பம்
அணங்கு
அயர்ந்து
-
தெய்வம்
உண்டாகச்
செய்து
அணி
-
அண்மை,
சேனைகளின் பிரிவு
அணி
மயில்
-
வாளால்
செய்யும் போரில் மயில் போல
அழகாகப் பின் வாங்கல்
அதிர்
உவர்
-
உவர்
நீரையுடைய முழங்கும்
கடல்
அந்தர்கள்
-
அறிவில்லார்,
குருடர்
அம்பல்
-
மறைமுகமாகச்
சிலர் பேசுதல்
அம்பலம்
-
மன்றம்,
பொது இடம் (பொன்னம்பலம்)
அமர்க்கலி
-
போர்
ஒலி; போர் முழக்கம்
அமரர்
-
தேவர்
(இறப்பில்லாதவர்)
அமுதம்
-
தெய்வ
உணவு, சுவை மிக்க
உணவு
அமுது
-
அமுதம்
(அமுதம் போன்ற
இறைவன்)
அமையாமுன்
-
செய்த
அவ்வளவிலேயே (விரைவைக்
காட்டும் குறிப்புத் தொடர்)
அயர்தல்
-
தளர்தல்,
செய்தல்
அயலும்
உம்பரும்
-
மண்ணும்
விண்ணும்
அரக்கர்
வெள்ளம்
-
அசுரர்
கூட்டம்
அரக்கு
அடுத்த
-
அரக்கில்
அழுத்திய
அரங்கம்
-
கூத்தாடும்
இடம்
அரமகளிர்
-
தெய்வப்
பெண்கள்
அரவர்
குழு
-
பாம்பின்
கூட்டம்
அரி
-
திருமால்,
இந்திரன்; சிங்கம், குரங்கு, பன்றி;
கண்வரி, வெள்ளை விழியில் அமைந்து
கண்களுக்கு அழகு தரும் மெல்லியவாய்
உள்ள சிவந்த வரிகள்
அரி
வினை
-
இந்திரன்
செயல், அரிந்த தொழில்
(மலைகளைச் சிறகரிந்தது)
அருகிய
கற்பு
-
குறைந்த
கற்பு; கற்பு இன்மை; காணுதற்கு
அரியதான கற்பு
அருங்
கதி இருப்பு
-
பெறுதற்கு
அரிய வீட்டுலகம்
(மோக்ஷம்)
அருட்கண்
-
இறைவன்
திருவுருவில் இறைவியின்
பாகமாகிய இடப் பாகத்திலுள்ள கண்
அருட்
குறி நிறுத்தி
-
தன் கருணையைத்
தெய்வமாக அமைத்து
அருட்
கொடி இரண்டு
-
அருளுருவாய
தெய்வயானையும், வள்ளி
நாச்சியாரும்
அருந்தவன்
-
அரிய
தவம் செய்தவன்
(பகீரதன்)
அரும்பா
-
வெளிப்படாத,
தோன்றாத
அரு
மறைத் தாபதன்
-
வேதம்
வல்ல முனிவர்
(சிவகோசரியார்)
அருவருத்து
-
அருவருப்புற்று,
வெறுத்து
அருவி
-
மலையினின்றும்
வீழும் நீர்
அருள்
நதி
-
அருள்
தரும் கங்கையாறு
அல்குல்
-
இடை,
குறுகிய இடம், பக்கம்
அலகிட்டு
-
துடைப்பத்தால்
துப்புரவு
செய்து
அலகு
-
பறவைகளின்
மூக்கு, பலகறை
அலகை
நெட்டிரதம்
-
பேய்த்தேர்
(கானல்
நீர்)
அவ்வயினான
-
அதுவும்
அப்படியே
அவபிரதம்
-
யாகத்தின்
முடிவில் நீராடுகை
அவி
-
வேள்வியில்
தேவர்களுக்குக் கொடுக்கும்
உணவு
அவைத்தல்
-
தினை,
நெல், முதலிய தானியங்களைக்
குற்றுதல்
அழல்பசி
-
நெருப்புப்
போன்ற பசி; வருத்துகின்ற
பசி
அழுங்கல்
-
ஆரவாரம்
செய்தல், துன்பமுறுதல்,
வருந்தல்