தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-உ


உக்கிரன்
-
உக்கிர பாண்டியன்
உகண்டு
-
நெளிந்து
உகளும்
-
புரளும், பெயரும்
உகிர்
-
நகம்
உகும் நீர்
-
சிந்தும் நீர்; வார்த்துக் கொடுக்கும் நீர்
உகைப்ப
-
பாய
உகையும்
-
செலுத்தும்
உட்க
-
அஞ்ச
உட்கை
-
உள்ளங்கை
உட்கையின்
முறித்தல்
-
வாட் போரில் கைக்குள் அடக்கி முறித்தல்
உட்பகை ஐந்து
-
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்
ஐம்புலன்கள் தீய வழியில் செல்லுவதாலாகிய பகை
உடலக்
கண்ணன்
-
உடல் முழுதும் கண்ணையுடையவன் (இந்திரன்)
உடற்றுதல்
-
வருத்துதல், அழித்தல், போர் புரிதல்
உடன்று
-
சினந்து
உடு
-
விண்மீன், நட்சத்திரம்
உடைகுநர்
-
தளர்பவர்
உடைத்து
-
அழித்து
உடைந்து
-
மனம் உடைந்து, வருந்தி, தோற்று, அஞ்சி
உடைப்ப
-
ஊடுருவிச் செல்ல
உணங்கல்
-
வற்றல், கருவாடு
உணங்கி
-
வருந்தி
உணங்கு
-
வாடு
உணா
-
உணவு
உணும்
-
உண்ணும், அனுபவிக்கும்
உததி
-
கடல்
உந்தி
-
கொப்பூழ், தள்ளி
உம்பர்
-
விண், ஆகாயம், தேவர்
உம்பல்
-
யானை
உம்மை
-
மறுமை
உமா
-
உமையவள்
உமிழ்தல்
-
வெளிப்படுத்துதல், கக்குதல்
உய்ய
-
பிழைக்கும்படி
உயர்மகன்
-
வடுகக் கடவுள் (பைரவர்): பிள்ளை எனல் ஒரு
சார் மரபு
உயிர்த்தல்
-
ஈனுதல், பெறுதல், பெருமூச்சு விடுதல்
உரகர்
-
நாகர்
உரகன்
-
பாம்பு (காளிங்கன்)
உரப்ப
-
ஒலி செய்ய
உரம்
-
மார்பு, வலிமை
உரிவை
-
தோல்
உரு
-
வடிவம்
உருத்தன்ன
-
உருக் கொண்டால் ஒத்த
உருத்து
-
சினந்து
உருப் பெறுதல்
-
வடிவெடுத்தல்
உருவி
-
கடந்து
உருள்
-
உருளை, வண்டி
உலகியல்
மறந்த கதியினர்
-
துறவிகள்
உலகு இரண்டு
-
விண்ணுலகு, மண்ணுலகு
உலண்டு
-
கூட்டுப் புழு; கோற் புழு
உலந்த கடன்
-
இறந்தவர்க்குச் செய்யும் கடன், ஈமக் கடன்
உலம்
-
திரண்ட கல், கல்-தூண்
உலர்
-
காய்ந்த
உலவா
-
கெடாத
உலவை
-
தழை, மரம், காற்று
உலறிய
-
காய்ந்த
உலைதல்
-
வருந்துதல்
உவட்டாது
-
தெவிட்டாது
உவட்டி
-
மிகுந்து, பெருகி
உவணக் கொடியினர்
-
திருமால் (கருடனைக் கொடியாக உடையவர்)
உவணம்
-
கருடன், பருந்து
உவர்
-
உப்பு, கடல்
உவா மதி
-
கலைகள் நிறைமதி, பூர்ண சந்திரன்
உழக்கும்
-
கலக்கும்
உழவக் கணம்
-
உழவர் கூட்டம்
உழவச் சேடியர்
-
வயல் வேலை செய்யும் பெண்கள்
உழல்தல்
-
திரிதல்
உழுவல் நலம்
-
பல பிறப்புக்களில் தொடர்ந்த அன்பு
உழுவை
-
புலி
உழை
-
பஞ்சு; மான், பெண்மான்; உழை என்னும் பண்; பக்கம்
உழையர்
-
வலாளர், பக்கத்திலுள்ளவர்
உள்
-
உள்ளம்
உள் கவை
-
உள்ளே பிளவுடைய
உள் குடி
-
உறவாய குடிமக்கள்
உள்ளம்
-
மனம்
உள்ளி
-
நினைந்து
உளச் சுருள்
-
விரிவின்றிச் சுருங்கிய உள்ளம்
உளறி
-
அலறி
உளியம்
-
(உளி-அம்) - தச்சுக் கருவிகள்
உளை
-
பிடரி மயிர்
உளை கடல்
-
ஒலிக்கின்ற கடல்
உறுத்தல்
-
அழுத்துதல், விரித்தல், சினத்தல்
உறு படை
-
பெருஞ் சேனை
உறை
-
மழைத் துளி
உறைக்கும்
-
துளிக்கும்
உறை கொண்டு
-
தங்கியிருந்து
உறையுள்
-
தங்கும் இடம், மாளிகை
உன்னா
-
நினைக்காது

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:41:39(இந்திய நேரம்)