தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-கா


கா
- சோலை
காகதுண்டம்
- அகில்
காகளம்
- ஊது கொம்பு
காகுளி
- பாடும்போது பேய்க் குரல் போன்ற வெறுப்பான
  ஒலி தோன்றுவது
காட்சி செய்
நகர்
- கண்ணால் பார்த்த அளவிலேயே நலம்தரும் நகர்
  (சிதம்பரம்)
காட்சியள்
- தோற்றத்தாள்
காட்ட
- கூட்டுவிக்க
காட்டை
- எல்லை; மிகச் சுருங்கிய கால அளவு, கை நொடிப்
  பொழுது 64 கொண்டது என்றும், கண்ணிமைப்
  பொழுது 15 அல்லது 18 கொண்டது என்றும்,
  கூறுவர்
காண்டம்
- நீர்
காண்டி
- காண்பாய்
காணி
- உரிமை
காத்திரம்
- யானையின் முன்கால்
காதற்கால்
- காதலாகிய காற்று
காப்பு
- கங்கணம்
காம்பு
- மூங்கில்
காம உததி
- காமக் கடல்
காமம்
- விருப்பம், இன்ப நுகர்ச்சி
காமம் ஆறு
- காமம், குரோதம், லோபம், மோகம், மதம்,
  மார்ச்சரியம், என்னும் ஆறு குற்றம்
காமர்
- அழகிய
காமரு
- அழகு பொருந்திய
காய்
- கோபிக்கிற
காய்த்தென்ன
- தோன்றி இருப்பது போல
கார்
- கருமை, மேகம்; கார் காலத்தில் விளையக் கூடிய
  நெற்பயிர், கார் நெல்
கார் இதழ்
- கரிய இதழ்
கார் உடல்
- கரிய உடல்
கார்ப் புனம்
- கரிய தினைப் புனம்
கார் மதம்
- கரிய மத நீர்
கார்முகம்
- வில்
கார் வான்
- கரிய மேகம்
காரான்
- எருமைக் கடா
கால்
- வாய்க்கால், திருவடிகள், காலம், காற்று
கால்தல்
- வெளிப்படுத்துதல், உமிழ்தல்
காலக் கடை
- ஊழி முடிவு
காலக் குறி
- காலத்தின் இயல்பு
காலம்
- காலக் கடவுள்
காலம் கோடா
- நாள் தவறாமல்
காலன்
- யமன்
காவல் தரு
- காவலையுடைய மரம் (கற்பக மரம்)
காவி அம்
களத்தினன்
- நீலகண்டன்
காற்படை
- கோழி
காற்றி
- வெளிப்படுத்தி
கான் யாறு
- காட்டாறு
கான்றிடும்
- கக்கிய
கானம்
- இசைப் பாட்டு, நெய்தல் நிலம்
கானல்
- உப்பங்கழிப் பக்கத்துள்ள சோலை
கானவன்
- வேடுவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:43:01(இந்திய நேரம்)