தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-சி


சிகை
- மயிர்முடி, பக்கம், தீக் கொழுந்து
சிஞ்சை
- முழக்கம்
சிதலை
- கறையான்
சிந்தூரம்
- திலகம்
சிரல்
- சிச்சிலிப் பறவை, மீன் குத்திக் குருவி
சில்லிடம்
- நெருக்கமான இடம்
சில்லை
- கீழ் மக்கள்
சிலை
- வில், மலை, கல், வால்
சிற்றில்
- சிறு வீடு
சிறு பிறை
- இளம் பிறை
சிறுமதி
- பிறைச் சந்திரன்
சிறுவன்
- பிள்ளை
சிறை
- பக்கம்
சிறைப் புனல்
- கரைகட்டிய நீர்நிலை
சின்னம்
- உறுப்புக்கள்
சினம்
- கோபம்
சினை
- கிளை
சினைத்த
- கிளைத்த

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:45:00(இந்திய நேரம்)