தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-சு


சுகம்
- கிளி
சுட்டி
- நெற்றிச் சுட்டி
சுடிகை
- உச்சி
சுண்டி
- மெலிந்து; விரலால் தெறித்து
சுண்ணம்
- பொடி, மணத் தூள்
சுரக்க
- மேன்மேல் உண்டாக
சுரம்
- பாலை வனம்
சுரிதல்
- சுழிதல், மடிப்பு விழுதல்
சுருக்கு
- சுருக்கப்பட்டது
சுருங்கை
- சுருங்கிய வழி, நீர் முதலியன செல்லுதற்கு
  நிலத்துள் கரந்து படுத்த வழி, மதகு
சுருப்பு
- வண்டு
சுரும்பு
- வண்டு
சுரை
- சுரைக் குடுக்கை
சுரைக் குடம்
- சுரைக்காய்க் குடம்
சுவல் உளை
- பிடர் மயிர்
சுள்ளி
- சிறிய குச்சுக்கள்
சுற்று ஒழுக்கிய
- சுற்றிலும் இறக்கிய
சுறவம்
- சுறா மீன்
சுனை
- நீர்நிலை, பொய்கை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:45:20(இந்திய நேரம்)