தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-ந


நகர்
- கோவில்
நகுதலை
- சிரிக்கின்ற வெண் தலை
நச்சுதல்
- விரும்புதல்
நச்சுவிழி
- விஷக் கண், விஷம் போன்ற கண்
நஞ்சு
- விஷம்
நட்டு
- நண்பு செய்து
நடித்த
- உலகம் மயங்கக் கூறிய
நடுநாள்
- அரையாமம்
நடைத் திரைப்
பரவை
- எழும் அலைகளையுடைய கடல்
நடைமலை
- யானை
நண்ணலர்
- சேராதவர்
நணி
- நெருங்கி
நந்தி
- பெருகி
நந்து
- இப்பி
நரகு
- நரகம்
நரைத்தலை
முதியோள்
- நரைத்த மயிரைத் தலையில் கொண்ட
  முதியோள் (வந்தி)
நல் நயம்
- மிகவும் நன்மை
நலம்
- அன்பு, இன்பம்
நவ்வி
- மான்
நவத்தலை
- நவகோணம், ஒன்பது மூலை
நவமணி
- புதிய மணி, ஒன்பது மணி
நவிற்ற
- சொல்ல
நள் இருள்
- செறிந்த இருட்டு
நளிர்
- குளிர்ச்சி, பெருமை
நறவருவி
- தேன் அருவி
நறவு
- தேன், அவியுணவு
நன்று அளிக்கும்
- பெரிதும் காக்கின்ற
நன்னர்
- நன்மை
நனவு
- விழிப்பு
நனி
- மிகுதி
நனி உயிர்
- சிற்றுயிர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:48:20(இந்திய நேரம்)