புகர்
முகப்
புழைக் கை
- யானை
புகல்
விழும்
- புகலிடமாக
விரும்பத்தக்க
புகை உடல்
- புகை
போன்ற உடல்
புட்கால்
பாட்டினர்
- தும்புரு
நாரதர்
புடைமனம்
- தீய
வழியில் செல்லும் மனம்
புண்ணியக்
கணவன்
- அறமாய
கணவன்
புண்ணியச்
சாந்தம்
- தூய
திரு நீறு
புணர்
- சேர்க்கை,
முற்றுகை, புதுமை
புணர்
விழி
- புதுமையாய
கண்கள்
புணரா
மயக்கம்
- பொருந்தாத
மயக்கம்
புது முகம்
- பார்க்குந்
தோறும் புதிது புதிதாகத் தோன்றும்
முகம்
புயங்
கொட்டி
- தோள்
தட்டி
புயல்
கார்
- நீருண்ட
மேகம்
புரக்கலை
- காப்பாற்ற
வல்லையல்லை
புரசை
- யானைக்
கழுத்திடு கயிறு
புரந்தரன்
புதல்வி
- தெய்வயானை
புரிவளை
- முறுக்குள்ள
சங்கு
புரியாக்
கதம்
- உண்டாகாத
கோபம்
புரை அறும்
அன்பினர்
- குற்றமற்ற
அன்புடையார்
புல்லப்
பாண்
மகன்
- புன்மையுள்ள
பாணன்
புல்லம்
- அபிநயம்,
புன்மை, கீழ்மை, தழுவல்
புலத்தினர்
- இடத்துள்ளார்
புலம்
- அறிவு,
இடம், நாடு
புலவி
- வெறுப்பு,
சிறு துனி
புலன்
நெறி
வழக்கு
- ஐம்புல
வழியிற் செல்லும் செலவு
புலன்
பெற
- பரிச
உணர்ச்சி உண்டாக, அறிவு பெற
புலிக்கால்
முனிவன்
- வியாக்கிரபாதர்
புழைக்கை
- தொளைக்கை,
தும்பிக்கை
புள்ளி
- வேதம்
ஓதி விளக்கும் முறைகளில் ஒன்று
புள்ளியல்
பொருப்பு
- கிரௌஞ்ச
மலை
புள்ளியல்
மான்
- பறவை
போல் கால் பூமியில் படாத
இயல்புடைய குதிரை
புற் சேக்கை
- பனைமரத்தில்
அமைத்த கூடு
புற்று
அளை
- புற்றின்
வளை
புறம்
பறித்து
- பறித்துப்
புறத்தில் வீசி
புறவு
- முல்லை
நிலம், புறாக்கள்
புறவு பாட்டு
- முல்லை
நிலப் பாட்டு
புறன்
வழங்காது
- வெளிவிடாது
புனல்
- நீர்
(ஆகாய கங்கை)
புனிதக்
கலன்
- தூய
பாத்திரம்
புனைந்த
- போர்த்த,
அணிந்த