தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-பொ


பொகுட்டு
- தாமரைக் கொட்டை
பொங்கர்
- சோலை
பொங்கர்க்
குலத்தாய்
- சோலையாகிய நற்றாய்
பொடி
- மணல், பரல்
பொடித்தது
- தோன்றியது
பொடித்தல்
- துகளாக்குதல்
பொடித்தவர்
- பொடிசெய்தவர்
பொடித்து
- தோன்றி
பொதி
- கட்டு, பிணிப்பு, மூட்டை
பொதிதல்
- உள்ளடக்குதல், மறைத்தல்
பொதியப்
பொருப்பன்
- பாண்டியன்
பொதியம்
- பொதிய மலை
பொது
- அம்பலம்
பொதும்பர்
- சோலை, மரப் பொந்து
பொதுவகம்
- சபை
பொதுளிய
- நன்றாகத் தளிர்த்த, தழைத்த, நெருங்கிய
பொம்மல்
- பூரிப்பு
பொரி
- நெற்பொரி
பொரி உடல் மா
- சுரசுரப்பான உடலையுடைய மா வடிவமான
  சூரபதுமன்
பொரிதல்
- வெந்து தீய்தல்
பொருட்கான்
- பொருட்குச் செல்லும் காட்டு வழி
பொருநை
- தண் பொருநை ஆறு
பொருப்பு
- மலை
பொருவ
- ஒப்ப
பொலந் தார்
- பொன் மாலை
பொலம்
- பொன்
பொலன் மிளிர்
மன்றம்
- பொன்னம்பலம்
பொழில்
- சோலை, உலகம்
பொள்ளென
- விரைவாக
பொற்பு அமர்
- அழகமைந்த, சிற்பவிதி அமைந்த
பொற்றை
- சிறுமலை
பொறி
- தீப் பொறி, புள்ளிகள்
பொறை
- பொறுமை
பொன்
- அழகு, செம்பொன், கரும் பொன் (இரும்பு)
பொன் உலகு
- இந்திர உலகம்
பொன்
பெயருடையோன்
- இரணியன்
பொன் முகம்
- இரும்பாலாகிய (கரும் பொன்) கொழு நுனி
பொன்றிட
- கெட

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:51:20(இந்திய நேரம்)