தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-ம


மகப் பிழைத்து
- கன்றுகளைக் காணாமையால்
மகப் பேறு
- பிள்ளைப் பேறு
மகம்
- யாகம்
மகம் முற்றி
- யாகத்தை முடித்து
மகரத் தெய்வம்
- மகரமாகிய தெய்வம், கடல் தெய்வம்
மகார்
- இளைஞர்
மகிழ்ந்து
- செழித்து
மகிழ் நடம்
- ஆனந்தத் தாண்டவம்
மகிழ்நர்
- மருத நிலத் தலைவர்
மங்குல்
- மேகம், ஆகாயம்
மங்குல்வாவி
- ஆகாயமாய குளம்
மங்கையர்
- இளம் பெண்கள், தேவ மகளிர்
மஞ்சு
- இளமை, மேகம்
மஞ்சு அடை
குழல்
- மேகம் போன்று கரிய கூந்தலாள் (கங்கையாள்)
மட்டு
- தேன்
மடக்கி
- கொண்டு
மடங்கல்
- சிங்கம்
மடவரல்
- இளையாள்
மடியும்
- தடைபடும்
மடுக்க
- உண்ணற்கு
மடைக் குரல்
- அதர் தொங்கும் தொளையுள்ள கழுத்து
மடைப் பள்ளி
- சமையல் அறை
மண்டலித்து
- வளைந்து கூடி
மண் திரு
- பூமிச் செல்வம்
மண் புடைக்கும்
- பூமியில் விசைத்து அடிக்கும்
மண அழல்
- திருமண வேள்வி
மணக்க
- மிகுதியாகத் தோன்ற
மணக் கோல்
- மணமுள்ள மலர் அம்பு
மணந்த
- செறிந்த
மணந்தோர்
- கூடியவர்
மணம்
- இன்பம்
மணல் உலகம்
- நெய்தல் நிலம்
மணி
- சிந்தாமணி
மணி அரி
- மாணிக்கப் பரல்
மத்தம்
- ஊமத்த மலர்
மத்திமை
- பாடும்போது சமனோசை பிறக்கும் நிலை
மத்தியந்தணன்
- ஒரு முனிவன்; வியாக்கிரபாத முனிவரின் தந்தை
மதம்
- வலிமை
மதர்த்தல்
- செருக்குதல், களித்தல்
மதலை
- தூண்
மதன்
- ஆற்றல்
மதி
- சந்திரன்; மாதம்; அறிவு
மதிக் குல
மன்னவன்
- சந்திரகுலத்து அரசன் (மலயத் துவச பாண்டியன்
மதிக்கோ
- சந்திரனாகிய அரசன்
மதிஞர்
- அறிவுடையோர்
மதி புலவன்
- மதிக்கும் புலவன்
மதியக் கருத்து
- மனக் கருத்து
மதியாகுவன்
- அறிவுடையோனாவேன்
மது
- தேன்
மதுவம்
- தேன்
மந்தரம்
- படுத்தலோசை பிறக்கும் நிலை
மந்திரத் திருவேல்
- மந்திரம் பொருந்திய அழகிய வேல்
மயக்கம்
- தடுமாற்றம்
மயங்காத் தேவர்
- வேறுபடாத் தேவர்
மயங்கி
- வேறுபட்டு, கலந்து
மயிர் குறை
கருவி
- கத்தரிகை
மரக்கால்
- மரக்கால் என்னும் கூத்து
மரகதப் பாசடை
- மரகத மணி போன்ற பச்சிலை
மரகதப்
பொருப்பு
- பச்சை மலை
மரகதம்
- பச்சை இரத்தினம், மரகத மலை
மருட்சி
- மயக்கம்
மருத்து
- காற்று
மருது
- மருதமரம்
மருந்து
- அமுதம்
மருமம்
- மார்பு
மருமான்
- மருமகன், வழித் தோன்றல்
மருள்
- மயக்கம்
மருவலர்
- பகைவர்
மரு வளர்
- மணம் மிகுகின்ற
மருவுதல்
- கூடுதல்
மல்
- வளமை
மலக்க
- அலைக்க
மலயத்
தமிழ்க்கால்
- தமிழ்க் குன்றமாய பொதியத்தில் தோன்றும்
  இனிய தென்றற் காற்று
மலயம்
- பொதிய மலை
மலர் ஆவறிவு
- மலர்ச்சி ஆகின்ற அறிவு
மலை உறை
- மலையில் விழுகின்ற மழைத் துளி
மலைக்கன்னி
- மலைமகள் (பார்வதி)
மலைக் குஞ்சரம்
- மலையாகிய யானை
மலைக் கோடு
- மலை உச்சி
மலைப்புள்
- மழைப் புள் (வானம்பாடி)
மலையடி
- போர் செய்தற்குரிய காலுடைய சேவற்கோழி
மலையும்
- பறிக்கின்ற
மழலைக் கிளவி
- நிரம்பா மொழி
மழலைமென்
கிளவி
- பொருள் விளங்காத மெல்லிய இளம் பருவச்
  சொல்
மழு
- பரசு
மழு இராமன்
- பரசு ராமன்
மழைக் கண்
திறப்ப
- மழை பெய்யும்படி
மள்ளர்
- உழவர், வீரர்
மறம்
- பகை, துன்பம், வலி
மறலி
- எமன்
மறி
- கடா, ஆடு, மான், மடங்கி விழும் அலை
மறிக்க
- தடுக்க
மறிக் குலத்து
உழை
- மான் கூட்டத்துள்ள பெண் மான்
மறித்தகர்
- ஆட்டுக் கிடாய்
மறித்து
- மீளவும்
மறிய
- திரிய, விழ, தலை தடுமாற
மறு
- குற்றம்
மறுகுதல்
- மயங்குதல்
மறுத்த
- நீக்கிய
மறு நிலை
மைந்தன்
- வேறு குடியில் பிறந்த மகன்
மறு புலம்
- வேற்றிடம்
மறுமறந்தாங்கு
- மறந்து மறுகியாங்கு என மாற்றுக; மறந்து
  மயங்கியது போல, 'மறு' என்பது மறுகுதல்
  என்பதன் குறுக்கம் எனக் கொள்க.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:51:41(இந்திய நேரம்)