தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-வ


வட்கு
- மழுக்கம்
வட்டணை
- கேடகம்
வட்டை
- பாலை நிலத்து வழி
வட சொல் மயக்கம்
- வட சொல் புணர்ச்சி
வட திரு ஆலவாய்
- வட மதுரை
வடந்தை
- வாடைக் காற்று
வட புல விஞ்சையன்
- வட நாட்டுக் கலைஞன் (ஏமநாதன்)
வடம்
- கயிறு, சரடு, ஆலமரம்
வடமீன்
- அருந்ததி
வடவனக் காடு
- திருவாலங்காடு
வடவை
- வட கடலில் உள்ள பெண் குதிரையின்
  முகம் போன்ற உருவம் கொண்ட நெருப்பு
வடி
- மாவடு
வடிக் கண்
- கூரிய கண்
வடிவு எட்டு
- ஐம் பெரும் பூதம், சோம சூரியர்,
  வேள்வித் தலைவன்
வடு
- குற்றம்
வடு இரு மூன்று
- காமம், குரோதம், லோபம், மோகம்,
  மதம், மார்ச்சரியம், ஆகிய குற்றங்கள்
வடுத்து
- தோன்றி
வண்டொடு மகிழ்ந்து
- வண்டுகள் மொய்க்கச் செழித்து
வண்மை
- வளப்பம்
வதிபெறும்
- தங்கும்
வதிய
- தங்க
வயங்குதல்
- விளங்குதல்
வயாவு
- கருவுற்றார்க்கு உண்டாம் விருப்பம்
வயிற்று எழு தழல்
- பசித் தீ
வயிறுவாய்த்த
- பெற்ற
வரத்தியல் குறிப்ப
- வரங் கேட்க
வரத்து
- வரவு
வரநதி
- தேவ கங்கை
வரவு
- வருகை
வரிந்த
- கட்டிய, கட்டப் பெற்ற
வரிப் புனை பந்து
- வரி வரியாக அழகு செய்த பந்து
வரு குறி
- வருதற்குரிய அடையாளம்
வருடை
- மலையாடு
வருத்தி
- வரும்படி செய்தி
வரை
- மலை; எல்லை
வரை உலகு
- குறிஞ்சி நிலம்
வரைந்த
- எழுதிய
வரைப் பகை
- மலைகளுக்குப் பகைவன், இந்திரன்
வரையரமகளிர்
- மலைவாழ் தெய்வப் பெண்
வரையற
- எல்லையில்லாமல்
வரையாக் கற்பு
- அளவு படாக் கல்வி
வரையாது
- எல்லையில்லாது
வரையுடல் நிறைய
- மலைஇடம் எங்கும் நிறைய
வல்லி
- கால் விலங்கு
வலம்புரிச் சத்தம்
- வலம்புரிச் சங்கின் முழக்கம்
வலன்
- வலப் பக்கம்
வலி முகம்
- குரங்கு
வவ்வுறு மாக்கள்
- பொருள் கவரும் சுற்றத்தார்
வழக்கு
- முறைப்படி
வழிமுதல் தெய்வம்
- குல தெய்வம்
வழுத்துதல்
- துதித்தல்
வழுதி
- பாண்டியன்
வள்
- வளம்; கடிவாளம்
வள் உறை
- மிக்க நீர்த்துளி, வலிய உறை
வள்ளம்
- மரக்கால், கிண்ணம்
வள்ளி அம் கொழுந்து
- வள்ளி நாச்சியார்
வள்ளியோர்
- ஈவோர்
வள்ளுவன்
- திருவள்ளுவர்
வள்ளை
- வள்ளைக் கொடி
வள்ளையில் கருவி
- தோலால் மூடிய அழகுள்ள யாழ்
வளன்
- செல்வம்
வளி
- காற்று
வளிகுதை
- வாயுவாகிய அம்பு
வளிமகன்
- வாயுவின் மகன், அனுமன்
வளை
- சங்குகள்
வளைக் கிடை
கிடைக்கும்
- வளைந்து படுத்துறங்கும்
வறள் பால்
- உறைந்த பாற் கட்டி
வன்மீன்
- முதலை
வன்னி
- வன்னி மரம்
வன்னியர்
- படைத் தலைவர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:53:51(இந்திய நேரம்)