Primary tabs
போற் கண்களிகூர்ந்து எடுத்துக்கொண்டு போய்த் தன்மனைவிகையிலே கொடுத்துக் கபிலரென்று பெயரிட்டு வளர்த்தார். அந்தப்பிள்ளை தாய்தந்தைகளாலே பலமுயற்சிகளும் செய்து வளர்க்கப்பட்டு அறிவொழுக்கங்களிலே சிறந்து உபநயனத்துக்குத்தக்கப் பருவத்தை அடைந்தது. அப்பொழுது தந்தையார் மைந்தனுக்கு அச்சடங்கு செய்வித்தற்கு அந்நகருள் வாழும் அந்தணரை அழைத்தார். அதற்கு அவர்கள் கூடி இப்பிள்ளை நம்மரபிலே பிறந்ததல்லாமையால் கூடாதென மறுத்துக் கூறினார்கள். அது கேட்டுத் தந்தையார் மனங்கலங்கி நிற்கைகண்டு கபிலர் கடவுளது திருவருள்பெற்று அம்மறையவர் கூட்டத்துட் சென்று இந்த அகவல்பாடிக் கன்மத்தாலன்றிச் சென்மத்தாலே சாதியென்ப தொன்றில்லையெனச் சிந்தாந்தம் செய்தருளினார். பின்னர் அதுவேவிதியாக அக்கபிலருக்கு உபநயனச்சடங்கு நிறை வேறியது.